பெண் குழந்தைகளின் பெற்றோர்களே குட்நியூஸ்! 50 ஆயிரம் நிதிஉதவி - பெறுவது எப்படி?

Chief Minister Girl Child Protection Scheme | பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களுக்கு தமிழ்நாடு அரசு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 20, 2024, 01:52 PM IST
  • பெண் குழந்தை கொண்ட பெற்றோர்களுக்கு குட் நியூஸ்
  • 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி உங்களுக்கு கிடைக்கும்
  • எப்படி விண்ணப்பிப்பது என இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
பெண் குழந்தைகளின் பெற்றோர்களே குட்நியூஸ்! 50 ஆயிரம் நிதிஉதவி - பெறுவது எப்படி? title=

Chief Minister Girl Child Protection Scheme Tamil | தமிழ்நாடு அரசு பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு சமூகநலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் தமிழ்நாடு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம். இந்த திட்டம் 1992 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. பெண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெற்றோர் இந்த திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் வரை நிதி உதவி பெற முடியும். பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை இங்கே பார்க்கலாம்.

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் நோக்கம்:

பெண் சிசுக் கொலைகளை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அத்துடன் பெண் குழந்தைகள் கல்வி பெறுவதையும் இந்த திட்டம் உறுதி செய்கிறது. பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமூக மற்றும் நிதி அதிகாரம் வழங்குதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறது. 

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை பணம் உங்களுக்கு வரவில்லையா? அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்

பெண் குழந்தைகளுக்கான நிதியுதவி

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் 50 ஆயிரம் நிதியுதவி கொடுக்கப்படும். இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் இருவருக்கும் சேர்த்து தலா 25 ஆயிரம் வீதம் 50 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும். தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் இந்த நிதியுதவியை வழங்கும். பெண் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் இந்த நிதியுதவி அவர்களின் பெயரில் வங்கியில் நிலையான வைப்புத் தொகையாக டெபாசிட் செய்யப்படுகிறது. நிலையான வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்படும்.

பெண் குழந்தைகளுக்கான தொகை எப்போது கிடைக்கும்?

இந்த திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு பணம் கையில் கிடைக்காது. பெண் குழந்தையின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யப்படும். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் டெபாசிட் தொகை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் டெபாசிட் செய்யப்படும். பெண் குழந்தை 18 வயது நிரம்பியவுடன் வட்டியுடன் சேர்த்து வைப்புத் தொகை வழங்கப்படும். இந்தப் பலனைப் பெற, பெண் குழந்தைகள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளின் கல்விச் செலவுகளை ஈடுசெய்யும் வகையில், பெண் குழந்தைக்கு 6வது ஆண்டு வைப்புத்தொகையிலிருந்து ஆண்டுதோறும் ரூ.1800 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் வரம்புகள்

இத்திட்டத்திற்கு, ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் இருவரில் ஒருவர் 40 வயதுக்குள் கருத்தடை செய்து கொள்ள வேண்டும். 

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

தமிழக முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தேவையான ஆவணங்கள் 

வருமான சான்றிதழ், பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள், கருத்தடை சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லையா? இந்த எண்களில் புகார் தெரிவிக்கலாம்

மேலும் படிக்க | மாநாடு நடைபெற உள்ள நிலையில் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News