சமீப காலமாக பலருக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது, தலைமுடி உதிர்வு. இதற்காக பலர் பல விதமான விஷயங்களை பின்பற்றுகின்றனர். ஆனாலும் முடி கொட்டியது, கொட்டியபடியே இருக்கிறது என்ற கவலை பலருக்கு உண்டு. இதற்கு செயற்கை முறையில் பல வைத்தியங்கள் பார்த்தாலும், இயற்கையாக சில வைத்தியங்களை பார்த்தாலும் எதுவும் சரியாவதில்லை. ஆனால், இங்கு குறிப்பிடப்படும் எண்ணெயை மட்டும் உபயோகித்தால் போதும், உங்களது முடி கருகருவென அடர்த்தியாக வளரும். அது என்ன எண்ணெய் தெரியுமா?
ஆயுர்வேத முறையில் எந்த மருந்துகளை எடுத்துக்கொண்டாலும், அவை நோய்களை குணப்படுத்துவதோடு அந்த நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்து அதையும் சரி செய்துவிடும். இந்த ஆயுர்வேத முறையில் முடியையும் கருகருவென அடர்த்தியாக வளர செய்யலாம். தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் அதிகம் இருப்போர் இந்த எண்ணெயை உபயோகப்படுத்தலாம்.
ஆயுர்வேத முறையில் முடி வளர்ச்சி:
ஆயுர்வேத முறையின் படி முடி தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் உடலுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. உடலில் உள்ள நோய்கள் அல்லது பிரச்சனைகளின் தன்மைக்கேற்ப முடி தொடர்பான கோளாறுகளும் மாறுபடுகிறது. ஆயுர்வேத மூலிகைகளால் செய்த எண்ணெய்கள் சில உடலில் உள்ள பிரச்சனைகளை சமப்படுத்த உதவும். அது மட்டுமன்றி, இந்த எண்ணெய் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைக்கவும், முடியின் வேரை சரி செய்யவும் உதவுகிறது. இந்த எண்ணெயை எளிமையாக தயாரிக்கலாம்.
முடி வளர்ச்சிக்கான எண்ணெயை தயாரிக்கும் முறை:
ஆயுர்வேத எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:
>>பொடித்த வெந்தயம்-3 டீஸ்பூன்
>வல்லாரைச்சாறு-100 மில்லி லிட்டர்
>தேங்காய் எண்ணெய்-100 மில்லி லிட்டர்
>கரிசலாங்கண்ணி சாறு-100 மில்லி லிட்டர்
>நல்லெண்ணெய்-100 மில்லி லிட்டர்
>நெல்லிக்காய் சாறு_100 மில்லி லிட்டர்
மேலும் படிக்க | Hair Care Tips: இளவயதிலேயே நரை முடியா? இந்த காய் இருந்தால், நோ டென்ஷன்
தயாரிப்பது எப்படி?
>கரிசாலங்கண்ணி கீரையை சுத்தம் செய்து அதிலிருக்கும் சாறினை எடுத்துக்கொள்ளவும்.
>வல்லாரக்கீரையை சிறிதளவு தண்ணீர் தெளித்து அதிலிருந்தும் சாறு எடுத்துக்கொள்ளவும்.
>நெல்லிக்காயை கொட்டை நீக்கி தண்ணீர் சேர்க்காமல் சாறினை மட்டும் எடுத்துக்கொள்ளவும். மேற்கூறிய சாறுகளுடன் இதையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
>இரும்பு கடாயில் நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டையும் கலந்து சூடேற்றி வைத்துக்கொள்ளவும்.
>கலந்த சாறுகளுடன் வெந்தயம் சேர்த்துக்கொள்ளவும். இதை சூடேற்றிய எண்ணெயுடன் கலக்கவும்.
>இந்த எண்ணெய் அறை வெப்பநிலையில் இருக்கும் போது கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
தலையில் எப்படி தேய்க்க வேண்டும்?
>இந்த எண்ணெயை சில சொட்டுகள் மட்டும் எடுத்து உச்சந்தலையில் தினமும் தேய்த்து வரலாம்.
>பிற சமயங்களில் இந்த எண்ணெயை முடியின் வேர் முதல், முடிவு வரை தடவ வேண்டும்.
>எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.
>இந்த எண்னெயை பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பயன்படுத்தலாம்.
>இதை தொடர்ந்து பயன்படுத்துவதால் தலை முடி உதிர்வது குறையும், முடியின் அடர்த்தியும் அதிகரிக்கும்.
இந்த எண்ணெயால் உண்டாகும் நலன்கள்:
>வல்லாரை முடிக்கு ஊட்டமளிக்கும் மூலிகைகளுள் ஒன்று. இதனால் உச்சந்தலையின் ஆரோக்கியம் மேம்படு. இது, முடி வளர்ச்சிக்கு உதவும்.
>முடி வளர்ச்சிக்கு பெயர் பெற்ற மூலிகைகளுள் ஒன்று, கரிசலாங்கண்ணி. இது, முடி வேர்களை வலுப்படுத்தும்.
>உடலில் உள்ள உஷ்ணம் தணிய பயன்படுத்தப்படும் எண்ணெய், நல்லெண்ணய். இது, முடியை கருகருவென வைத்திருக்கவும் உதவும்.
>தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது, முடி நன்றாக வளர உதவுகிறது. மேலும், முடி உதிர்வையும் தடுக்கிறது.
மேலும் படிக்க | Hair Care Tips: கோடையில் கூந்தலை பராமரிக்க கூல் டிப்ஸ் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ