ரயில் நிலைய கௌண்டரில் வாங்கிய டிக்கெட்டை ஆன்லைனில் கேன்சல் செய்வது எப்படி

நீங்கள் ரயில் நிலையத்தில் உள்ள கௌண்டரில் டிக்கெட்டை புக் செய்திருந்து, அந்த பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் நீங்கள் இருந்தால், அந்த டிக்கெடை ரத்து செய்ய, ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2020, 03:40 PM IST
  • ரயில் நிலைய கௌண்டரில் புக் செய்த டிக்கெட்டையும் ஆன்லைனில் கேன்சல் செய்யலாம்.
  • இதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
  • இதற்கு சில நிபந்தனைகளும் உள்ளன.
ரயில் நிலைய கௌண்டரில் வாங்கிய டிக்கெட்டை ஆன்லைனில் கேன்சல் செய்வது எப்படி title=

ரயிலில் பயணம் செய்ய பல முறை முன்கூட்டியே கவுண்டரிலிருந்து ரயில் டிக்கெட்டுகளை வாங்குகிறோம். ஆனால் சில நேரங்களில் சில காரணங்களால் நாம் டிக்கெட்டுகளை ரத்து செய்ய வெண்டிய நிலை வருகிறது. நீங்கள் ரயில் நிலையத்தில் உள்ள கௌண்டரில் டிக்கெட்டை புக் செய்திருந்து, அந்த பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் நீங்கள் இருந்தால், அந்த டிக்கெடை ரத்து செய்ய, ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

இந்த கௌண்டர் டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் ரத்து செய்வதற்கான வசதியை IRCTC வழங்குகிறது.

ஆன்லைனில் ரத்து செய்வதற்கு முன்பு இதை அறிந்து கொள்ளுங்கள்

-டிக்கெட் வாங்கும் நேரத்தில் நீங்கள் சரியான மொபைல் எண்ணைக் கொடுத்தால் மட்டுமே கௌண்டரில் (Railway Counter) வாங்கிய உங்கள் டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்ய முடியும்.

-IRCTC இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, ரயில் தாமதமாகிவிட்டால் அல்லது ரத்து செய்யப்பட்டால் கவுண்டர் டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்ய முடியாது. சாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே பிஆர்எஸ் கௌண்டர் டிக்கெட்டை ரத்து செய்யவும் கட்டணத்தைத் திரும்பப் பெறவும் அனுமதி உண்டு.

-உங்களிடம் உறுதிப்படுத்தப்பட்ட கௌண்டர் டிக்கெட் இருந்தால், ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பும் அதை ரத்து செய்யலாம்.

-உங்கள் கௌண்டர் டிக்கெட் RAC அல்லது காத்திருப்பு பட்டியலில் (WL) இருந்தால், அதன் ஆன்லைன் ரத்து, ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் வரைதான் இருக்கும்.

ALSO READ: இனி ரயிலில் பயணம் செய்ய Platform ticket இருந்தால் போதும்... அதற்கான விதிமுறை என்ன?

ஆன்லைன் கேன்சலேஷன் செய்வது எப்படி

-கௌண்டரில் வாங்கிய டிக்கெட்டை நீங்கள் ஆன்லைனில் கேன்சல் செய்ய விரும்பினால், IRCTC-ன் வலைத்தள இணைப்பான https://www.operations.irctc.co.in/ctcan/SystemTktCanLogin.jsf -க்கு செல்ல வேண்டும்.

-இங்கே, பக்கம் திறந்த பிறகு, PNR எண் (PNR Number), ரயில் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட வேண்டும். கேப்ட்சாவுக்குக் கீழே – ‘I have read cancellation/boarding point change procedure and its rule’-ஐ டிக் செய்து Submit பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

-இதற்குப் பிறகு, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணில் OTP வரும்.

-இந்த OTP ஐ உள்ளிட்டு எண்டர் செய்ய வேண்டும்.

-OTP ஐ உள்ளிட்ட பிறகு, உங்கள் PNR எண் சரிபார்க்கப்ப்படும். அதன் பிறகு PNR விவரங்கள் திரையில் வரும்.

-விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன், டிக்கெட்டை முழுமையாக ரத்து செய்ய 'Cancel Ticket’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். ரீஃபண்ட் தொகை விவரம் திரையில் காண்பிக்கப்படும்.

-இதன் பிறகு, உங்கள் மொபைல் எண்ணில் PNR-ருடன் ஒரு செய்தி வரும். இது இப்படி இருக்கும் - Your PNR xxxxxxxxxx has been cancelled. Collect refund amt xxxxx from journey commencing station or nearby satellite PRS locations. Ref. Terms & conditions.

-இதன் பிறகு தாமதிக்காமல் ரிசர்வேஷன் கௌண்டருக்கு ஒரிஜினல் டிக்கெட்டை எடுத்துச்சென்று உங்கள் கேன்சலேஷன் தொகையைப் (refund) பெற்றுக்கொள்ளுங்கள். 

ALSO READ: புதிய ரயில் முன்பதிவு விதிகளை வெளியிட்டது IRCTC: இந்த வகையில் இனி booking இருக்கும்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News