புதிய ரயில் முன்பதிவு விதிகளை வெளியிட்டது IRCTC: இந்த வகையில் இனி booking இருக்கும்!!

டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான புதிய விதியை இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC) அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 7, 2020, 11:33 AM IST
  • ரயில் புறப்படும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் இரண்டாவது சார்டை தயாரிக்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.
  • டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான புதிய விதி வெளியிடப்பட்டுள்ளது.
  • புதிய மாற்றங்கள் கடைசி நிமிட திட்ட மாற்றங்களைச் சமாளிக்க வேண்டிய பயணிகளுக்கு வசதிக்காக சேர்க்கும்.
புதிய ரயில் முன்பதிவு விதிகளை வெளியிட்டது IRCTC: இந்த வகையில் இனி booking இருக்கும்!! title=

புதுடெல்லி: டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான புதிய விதியை இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC) அறிவித்துள்ளது. இந்த புதிய விதிப்படி, ரயில்கள் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் இரண்டாவது முன்பதிவு சார்ட் தயாரிக்கப்படும்.

முன்னதாக, தொற்றுநோய்களின் (Pandemic) போது, ​​பயணிகளின் வசதிக்காக ரயில் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக சார்ட் தயாரிக்கப்பட்டு வந்தது. தொற்றுநோய்க்கு முன்னர், புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே, ஒரே ஒரு சார்ட் மட்டும் தயாரிக்கப்பட்டது.

மீதமுள்ள இடங்களை பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு (Online Reservation) செய்யலாம் அல்லது பயணிகள் முன்பதிவு அமைப்பு (PSR) கவுண்டர்களுக்கு சென்று பதிவு செய்யலாம். முதலில் வந்தவர்களுக்கு முதல் சேவை என்ற அடிப்படையில் ரயில் இருக்கைகள் வழங்கப்பட்டன.

செயல்முறையில் வந்துள்ள புதிய மாற்றங்கள் கடைசி நிமிட திட்ட மாற்றங்களைச் சமாளிக்க வேண்டிய பயணிகளுக்கு வசதியாக இருக்கும். கடைசி நிமிடத் திட்ட மாற்றத்தைக் கொண்டவர்கள், இரண்டாவது சார்ட் தயாரிக்கப்படுவதற்கு முன்பாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அல்லது ரத்து செய்ய இது அனுமதிக்கும்.

ALSO READ: IRCTC-ன் இந்த டூரில் தீபாவளியன்று உண்மையான கங்கை குளியல்: Book today!!

IRCTC-ல் டிக்கெட்டுகளை எவ்வாறு முன்பதிவு செய்யலாம் என்பது இங்கே காணலாம்:

Step 1: irctc.co.in/nget/train-search என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்

Step 2: இப்போது, ​​நீங்கள் புறப்படும் இடம், இலக்கு, பயண தேதி, பயணியின் பயண வகுப்பு போன்ற விவரங்களை உள்ளிடவும்.

Step 3: 'Find Trains’ ஆப்ஷனில் கிளிக் செய்யவும்.

Step 4: ஒரு ரயிலைத் தேர்ந்தெடுக்கவும்

Step 5: ‘Availability option and fare journey’-ஐ கிளிக் செய்யவும்.

Step 6: இப்போது, ​​விரும்பிய தேதியில் கிடைக்கும் சீட்களின் எண்ணிக்கை, பெர்த் கட்டணம் ஆகியவை காண்பிக்கப்படும்

Step 7: உங்கள் ரயில் மற்றும் சீட்டை முடிவு செய்தவுடன் ‘Book Now’-ல் கிளிக் செய்யவும்.

Step 8: உங்கள் user name, password கொண்டு IRCTC அகௌண்டில் உள்நுழையவும்

Step 9: உங்கள் விவரங்களை நிரப்பவும்

Step 10: கட்டணம் செலுத்தவும். உங்கள் இருக்கைகள் முன்பதிவு செய்யப்படும்.

ALSO READ: தனியார் துறை பணியாளர்களுக்கு good news காத்திருக்கிறது: ஆய்வு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News