டெபிட் கார்டு இல்லாமல் யூபிஐ பின் நம்பரை மாற்றுவது எப்படி?

கூகுள் பே செயலியில் பின் நம்பரை மாற்ற டெபிட் கார்டு தேவை. ஆனால் பேடியம் செயலியில் நீங்கள் டெபிட் கார்டு விவரங்களை உள்ளிடாமலேயே யூபிஐ பின்னை மாற்றி கொள்ளலாம்.  

Written by - RK Spark | Last Updated : Oct 13, 2022, 06:28 AM IST
  • யூபிஐ மிகவும் பிரபலமான ஒன்றாக மக்களிடத்தில் இருந்து வருகிறது.
  • செப்டெம்பர் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகள் 11-லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
  • போன் பே, பேடியம் மற்றும் கூகுள் பே போன்ற பல யூபிஐ பயன்பாடுகள் கிடைக்கின்றன.
டெபிட் கார்டு இல்லாமல் யூபிஐ பின் நம்பரை மாற்றுவது எப்படி? title=

ஒரு பொருளை வாங்க ரொக்கமாக கொடுத்து வாங்குவதற்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக கட்டணம் செலுத்துவது பாதுகாப்பான ஒன்றாக கருதப்படுகிறது.  கட்டண முறையில் யூபிஐ மிகவும் பிரபலமான ஒன்றாக மக்களிடத்தில் இருந்து வருகிறது, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) டேட்டாக்களின்படி, இந்த ஆண்டில் செப்டெம்பர் மாதத்தில் மட்டும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பரிவர்த்தனைகள் ரூ.11-லட்சம் கோடியைத் தாண்டியிருப்பது தெரியவந்துள்ளது.  போன் பே, பேடியம் மற்றும் கூகுள் பே போன்ற பல யூபிஐ பயன்பாடுகள் கிடைக்கின்றன, இவற்றில் நமது வங்கி கணக்கை இணைத்து கொள்வதன் மூலமாக நாம் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.  ஏடிஎம்-ல் பிணமெடுக்க ரகசிய இலக்க எண் தேவைப்படுவது போலவே, இந்த யூபிஐ மூலம் நாம் எந்தவித கட்டணத்தையும் செலுத்த நான்கு அல்லது ஆறு இலக்க ரகசிய எண் தேவை. 

மேலும் படிக்க | ஒரே போனில் இரண்டு வாட்ஸ்சப் பயன்படுத்துபவரா நீங்கள்? எச்சரிக்கை!

யூபிஐ பின் நம்பர் மறந்துவிட்டால் அதனை எப்படி மீட்டெடுப்பது என்பது பற்றி இனி கவலைப்பட வேண்டிய தேவையில்லை.  நீங்கள் பயன்படுத்தக்கூடிய கூகுள் பே, பிஹெச்ஐஎம் மற்றும் போன் பே போன்ற யூபிஐ பயன்பாடுகள் மூலமாக பின் நம்பரை நீங்கள் மீட்டெடுக்கலாம்.  கூகுள் பே செயலியில் நீங்கள் மறந்துவிட்ட பின் நம்பரை மீட்டெடுக்க டெபிட் கார்டு விவரங்களை உள்ளிட்ட வேண்டும், அப்போது தான் உங்கள் பின் நம்பரை மீட்டெடுக்க முடியும், ஆனால் பேடியம் செயலியில் நீங்கள் டெபிட் கார்டு விவரங்களை உள்ளிடாமலேயே யூபிஐ பின்னை மாற்றி கொள்ளலாம்.  இதனை செய்ய பின்வரும் படிநிலைகளை பின்பற்ற வேண்டும்.

1) பேடியம் செயலியை திறந்து ப்ரொபைல் ஐகானைக் கிளிக் செய்யவும்.

2) அதில் 'UPI & Payment Settings' என்பதைத் தேர்ந்தெடுத்ததும், கட்டண அமைப்புகள் பகுதி தோன்றும்.

3) இப்போது 'யூபிஐ & இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள்' மெனுவைத் க்ளிக் செய்யவும்.

4) பின்னர் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுத்து, 'பின்னை மாற்று' என்பதை க்ளிக் செய்யவும்.

5) இப்போது 'எனது பழைய யூபிஐ பின் நினைவிருக்கிறது' என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து பின்னை உள்ளிட வேண்டும்.

6) இப்போது புதிய பின்னை அமைத்து மாற்றத்தை உறுதிப்படுத்தவும்.

மேலும் படிக்க | அகவிலைப்படி உயர்வுக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டுமா? எவ்வாறு கணக்கிடப்படுகிறது? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News