Aadhaar Card: தொலைந்துவிட்டால் கவலைப்பட வேண்டாம், இந்த வழியில் டிஜிட்டல் ஆதார் download செய்யலாம்!!

இந்தியாவில், ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. பல அரசு மற்றும் தனியார் செயல்பாடுகளுக்கு அடையாள அட்டையாக ஆதார் அட்டை தேவைப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 31, 2020, 07:15 PM IST
  • பலர் ஆதார் அட்டையை தங்கள் பைகளில் எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
  • வெளியே எடுத்துச்செல்லும் வேளைகளில் ஆதார் அட்டை தொலைந்துபோக வாய்ப்புள்ளது.
  • பல்வேறு அரசு மற்றும் தனியார் செயல்பாடுகளில் பயன்படுத்தப்படலாம்.
Aadhaar Card: தொலைந்துவிட்டால் கவலைப்பட வேண்டாம், இந்த வழியில் டிஜிட்டல் ஆதார் download செய்யலாம்!! title=

புது தில்லி: இந்த நவீன காலத்தில், அனைவருக்கும் அதிகாரப்பூர்வமான அடையாளங்கள் இருப்பது மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவில், ஆதார் அட்டை (Aadhaar Card) முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. பல அரசு மற்றும் தனியார் செயல்பாடுகளுக்கு அடையாள அட்டையாக ஆதார் அட்டை தேவைப்படுகிறது.

பலர் ஆதார் அட்டையை தங்கள் பைகளில் எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அப்படி செய்யும்போது, தேவைப்படும்போது உடனடியாக அவர்களால் பயன்படுத்த முடிகிறது. இப்படி வெளியே எடுத்துச்செல்லும் வேளைகளில் உங்கள் ஆதார் அட்டை தொலைந்து விட்டால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. சில கிளிக்குகள் மூலம், நீங்கள் ஆதார் அட்டையின் டிஜிட்டல் நகலை பெறலாம். இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் டிஜிட்டல் நகல்களை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது.

ALSO READ: Aadhar Card-ல் இந்த 5 விஷயங்களை update செய்ய எந்த ஆவணமும் தேவை இல்லை!!

இந்த வழியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் அட்டை தபால் மூலம் பெறப்பட்ட ஆதார் அட்டையைப் போலவே செல்லுபடியாகும். இது பல்வேறு அரசு அல்லது தனியார் செயல்பாடுகளில் பயன்படுத்தப்படலாம். ஆதார் அட்டையின் டிஜிட்டல் நகலை எவ்வாறு பதிவிறக்குவது என்று பார்க்கலாம்.

UIDAI-ன் படி, பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் தபால் மூலம் பெற்ற ஆதார் அட்டை எந்தெந்த பணிகள் மற்றும் பயன்பாடுகளில் செல்லுபடியாகுமோ, அந்த அனைத்து பணிகள் மற்றும் பயன்பாடுகளுக்கும் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதாரையும் பயன்படுத்தலாம்.  

Step 1: முதலில் நீங்கள் UIDAI இன் ஆதார் போர்ட்டலான https://eaadhaar.uidai.gov.in இல் உள்நுழைய வேண்டும்.

Step 2: அடுத்தது ‘Get Aadhaar’ செக்ஷனில் சென்று ‘Download Aadhaar’-ல் கிளிக் செய்யவும்.

Step 3: இதற்குப் பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கும். இந்த பக்கத்தில், ஆதார் எண், பதிவு எண் அல்லது மெய்நிகர் எண்ணை (virtual number) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை உள்ளிட வேண்டும்.

Step 4: இப்போது கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு 'Send OTP' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

Step 5: இனி உங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் 6 இலக்க OTP ஐப் பெறுவீர்கள்.

Step 6: இப்போது நீங்கள் OTP ஐ உள்ளிட வேண்டும். பிறகு, க்விக் சர்வேயில் சில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

Step 7: இதற்குப் பிறகு ‘Verify and Download’ ஆப்ஷனில் கிளிக் செய்யவும்.

Step 8: இந்த வழியில் உங்கள் ஆதார் அட்டையின் டிஜிட்டல் நகல் பதிவிறக்கம் செய்யப்படும்.

ஆதார் அட்டையின் இந்த மின்னணு நகல் பாஸ்வர்டால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆதார் அட்டையின் இந்த டிஜிட்டல் நகலைத் திறக்க, பாஸ்வர்டை உள்ளிட வேண்டும். இந்த பாஸ்வர்ட் வழக்கமாக ஆதார் அட்டைதாரரின் பெயரின் முதல் நான்கு எழுத்துக்கள் மற்றும் பிறந்த ஆண்டாக இருக்கும். ஆதாரின் டிஜிட்டல் நகலுக்கான பாஸ்வர்டைப் பற்றிய தகவல்கள் உங்களுக்கு “Verify and Download” ஆப்ஷனின் கீழே கிடைக்கும். ஆதார் அட்டைதாரர் ஆதார் மின் நகலைப் பதிவிறக்கும் போது 'Masked’ நகலைப் பதிவிறக்குவதற்கான விருப்பத்தையும் பெறுகிறார். இந்த நகலில் ஆதாரின் அனைத்து 12 இலக்கங்களையும் காண முடியாது. 

ALSO READ: உங்கள் PAN Card Fake-கா, Original-லா? வீட்டிலிருந்தபடியே இந்த வழியில் தெரிந்துகொள்ளலாம்!!

Trending News