தனிநபர் கடனை குறைந்த வட்டி விகிதத்தில் பெறுவது எப்படி?

Personal Loan Apply: தனிநபர் கடனை பல வங்கிகள் வழங்குகின்றனர். இருப்பினும், கடன் தொகையை அதிகரிக்க நாம் சில விஷயங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Nov 4, 2023, 04:09 PM IST
  • தனி நபர் கடன் பெரிதும் உதவியாக இருக்கும்.
  • பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த தொகை உதவுகிறது.
  • குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற வழிகள் உள்ளது.
தனிநபர் கடனை குறைந்த வட்டி விகிதத்தில் பெறுவது எப்படி? title=

Personal Loan Apply: பொதுவாக நாம் கடன் வாங்கும் போது, அதனை குறைந்த வட்டி விகிதத்தில் பெற விரும்புகிறோம்.  குறைந்தபட்ச செலவில் தனிநபர் கடனைப் பெறும்போது, ​​நாம அதற்கு சாதகமான விதிமுறைகளில் கடனைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். இது செலவு, சேமிப்பு மற்றும் விரைவான கடனை திரும்பி செலுத்துதல் போன்ற பல நன்மைகளை நமக்கு வழங்குகிறது. எனவே, குறைந்த வட்டி விகிதத்தில் கடனை பெற சில வழிகளை நாம் பின்பற்ற வேண்டும்.  மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் உங்களின் பல்வேறு நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய தனிநபர் கடனைப் பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்றலாம்.  

கிரெடிட் ஸ்கோர் அதிகம் இருக்க வேண்டும்: எப்போதும் கடன் வாங்கும் முன், உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்து இருப்பது குறைந்த அல்லது கம்மியான வட்டி விகிதத்தில் தனிநபர் கடனை பெறுவதற்கான உங்கள் வாய்ப்பை அதிகரிக்கிறது. உங்கள் கடன் விண்ணப்பத்தை உடனடியாக வங்கிகள் பகுப்பாய்வு செய்ய, உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | NPS முக்கிய அப்டேட்: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம்.. உடனே தெரிந்துகொள்ளுங்கள்!!

நல்ல வேளைகளில் பணியமர்தல்: தனிநபர் கடன் வழங்கும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் நல்ல வேலைகள் மற்றும் நிலையான வருமானம் கொண்ட தனிநபர்களுக்கு கடன்களை வழங்க முன் வருகின்றனர்.  நிலையான வேலையை கொண்டிருப்பது, குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடனைப் பெறுவதற்கான உங்கள் வாய்ப்புகளை மேம்படுத்தலாம்.

கடன் வழங்குபவர்களை ஒப்பிடுங்கள்: பல்வேறு வங்கிகள் பல்வேறு விதங்களில் தனி நபர் கடன்களை வழங்குகின்றனர்.  வங்கிகள் தவிர பல்வேறு நிதி நிறுவனங்களும் கடன்களை வழங்குகின்றனர். சில தனியார் வங்கிகள் நல்ல வட்டி விகிதத்தில் தனி நபர் கடன்களை வழங்குகின்றனர். எனவே, கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு, கடன் வழங்குபவர்களின் வட்டி விகிதங்கள், கட்டணங்கள் மற்றும் விதிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மேலும், சில NBFC-கள் குறைந்த வட்டி விகிதத்தில் உங்கள் தனி நபர் கடன்களை பூர்த்தி செய்கின்றனர்.  ஆனால் இதற்கு பல்வேறு நிபந்தனைகளையும் கொண்டுள்ளனர் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.  

நிதி பரிவர்த்தனை: தானியங்கு கொடுப்பனவுகளில் (Automate Payments) பதிவு செய்வது உங்கள் நிதி நம்பகத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.  தவணைத் தேதியை நீங்கள் தவறவிடாமல் கடனை திரும்ப செலுத்துவது, இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க உதவும். இந்த முறையை சரியாக பின்பற்றினால், குறைந்த வட்டி விகிதத்தில் நல்ல கடன் தொகையை பெறலாம்.  இதுதவிர, நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்ட மற்றொரு நபரை உங்கள் கடன் பத்திரத்தில் கையெழுத்திட வைத்தால், குறைந்த வட்டி விகிதத்தில் கடனைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தலாம்.

வருமானம்: இவரை எல்லாவற்றையும் தவிர, நீங்கள் வாங்கும் சம்பளம் உங்கள் கடன் அளவை நிர்ணயிக்கிறது.  எவ்வளவு அதிகம் சம்பளம் வாங்குகிறீர்களா, அவ்வளவு அதிகம் கடன் தொகையை அதிகப்படுத்தலாம். மேலும் உங்கள் மாதாந்திர பரிவர்தனையை பொருத்தும் கடன் தொகை வழங்கப்படுகிறது.  மேலே குறிப்பிட்டுள்ளகுறிப்புகளைப் பின்பற்றினால், குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடனைப் பெறுவது எளிதாக இருக்கும். கூடுதலாக, எல்லா விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கவனமாகப் படிக்க வேண்டும். சில வங்கிகள் மறைமுகமாக கடன் தொகையில் வட்டியை வசூலிக்கின்றனர்.  எனவே, கடன் ஒப்பந்தத்தை ஏற்கும் முன் இந்தக் காரணிகள் அனைத்தையும் கருத்தில் கொண்டால் அது உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸா? 44% ஊதிய ஏற்றம்.. காத்திருக்கும் 2 நல்ல செய்திகள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News