இந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்: முழு விவரம் இதோ

பழைய நாணயங்களுக்கு பதிலாக பல லட்சம் ரூபாய் பெறுவதற்கான வாய்ப்பு வந்துள்ளது. உங்களை ஒரு கோடீஸ்வரராக்கக்கூடிய 1 ரூபாய் நாணயத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 21, 2021, 04:04 PM IST
  • இந்த 1 ரூபாய் நாணயம் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
  • இந்த பழைய நாணயங்களை ஏலத்தில் விற்க, நீங்கள் OLX தளத்துக்கு செல்ல வேண்டும்.
  • இந்த நாணயத்தை ஏலம் விட்டு ரூ .9 கோடி 99 லட்சம் வரை ஈட்ட முடியும்.
இந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்: முழு விவரம் இதோ title=

புதுடெல்லி: பழைய நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகளை சேகரிக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால், நீங்கள் கோடீஸ்வரராக ஒரு மிக நல்ல வாய்ப்பு வந்துள்ளது. பலருக்கு இந்த பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை சேகரிப்பதில் அதிக ஆர்வம் இருக்கும்.

இந்த நாணயங்களின் மதிப்பு இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. பழைய நாணயங்களுக்கு பதிலாக பல லட்சம் ரூபாய் பெறுவதற்கான வாய்ப்பு வந்துள்ளது. உங்களை ஒரு கோடீஸ்வரராக்கக்கூடிய 1 ரூபாய் நாணயத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஒரு நாணயத்தின் விலை ரூ .10 கோடி

இந்த 1 ரூபாய் நாணயம் (1 Rupee Coin) 10 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. ஆனால் இந்த நாணயம் ஒரு சாதாரண நாணயம் அல்ல. உங்களிடமும் இந்த 1 ரூபாய் நாணயம் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். இந்த நாணயம் பிரிட்டிஷ் ஆட்சியைச் சேர்ந்த நாணயமாக இருக்க வேண்டும். மேலும், இந்த நாணயம் 1885 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு 10 கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நாணயத்தை நீங்கள் ஆன்லைனில் விற்கலாம்.

நாணயங்களை எங்கே விற்பது

ஆன்லைன் விற்பனையில், நீங்கள் இந்த நாணயத்தை ஏலம் விட்டு ரூ .9 கோடி 99 லட்சம் வரை ஈட்ட முடியும். ஆனால், இந்த ஒரு நாணயத்துக்காக இவ்வளவு பெரிய தொகையை யார் கொடுப்பார்கள் என நீங்கள் நினைக்கலாம். இதற்கான விடையை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ: இந்த 20 ரூபாய் நோட்டு இருந்தால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் -முழு விவரம்

மேலும், இந்த நாணயத்தை எங்கு ஏலம் விட்டால், நீங்கள் அதிக பணத்தை ஈட்ட முடியும் என்பதையும் காணலாம். இது தவிர, ஏலத்தின் முழு செயல்முறை பற்றியும் இங்கே விரிவாகக் காணலாம்.

இந்த வகையில் ஆன்லைனில் ஏலம் விடுங்கள்

இந்த பழைய நாணயங்களை ஏலத்தில் விற்க, நீங்கள் OLX தளத்துக்கு செல்ல வேண்டும். இங்கே நீங்கள் உங்கள் லாக் இன் ஐடி-ஐ உருவாக்கி உங்கள் நாணயத்தை ஏலம் விடலாம். இது தவிர, indiamart.com இல் உங்கள் ஐடியை உருவாக்கியும் நீங்கள் நாணயங்களை விற்கலாம். இதில் உங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் (Money) கிடைக்க வாய்ப்புள்ளது.

நாணயத்தை ஏலத்தில் விற்க, உங்கள் நாணயத்தின் புகைப்படத்தை முதலில் பகிர வேண்டும். பலர் பழங்கால பொருட்களை வாங்குவதில் அதிக நாட்டம் காட்டுகிறார்கள். பழைய நாணயங்களை (Old Coins) சேகரிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அவற்றை வாங்குவதற்காக நீங்கள் சொல்லும் தொகையை அளிக்க தயாராக இருக்கிறார்கள்.

ALSO READ: இந்த 2 ரூபாய் காயின் இருந்தால் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் -முழு விவரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News