இந்த ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருந்தா, ஒரே இரவில் லட்சாதிபதி ஆகலாம்

பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை சேகரிப்பதில் பலருக்கு ஆர்வம் அதிகம் உள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்று அதிக பணம் சம்பாதிக்கலாம்.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 22, 2021, 02:43 PM IST
இந்த ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருந்தா, ஒரே இரவில் லட்சாதிபதி ஆகலாம்

புது தில்லி: பணம் ஈட்டுவது மனித வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு விஷயமாகும். சிலர் கடினமாக உழைத்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள், சிலரோ ஒன்றும் செய்யாமல், வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்ட வழி தேடுகிறார்கள்.

அப்படி வீட்டில் இருந்தபடியே பணம் பெற விரும்புபவர்களுக்கான செய்தி இது. உங்களிடம் 10, 20, 50 அல்லது 100 ரூபாய் நோட்டுகள் (Rupee Note) இருந்தால், அதில் அச்சிடப்பட்டிருக்கும் எண்ணில் 786 என்ற எண் இருந்தால், வீட்டில் இருந்தபடியே நீங்கள் ஒரே இரவில் கோடீஸ்வரராகலாம். இது எப்படி சாத்தியப்படும் என நீங்கள் நினைக்கலாம். இதற்கான வழியை இந்த பதிவில் காணலாம்.

பலர் பழைய ரூபாய் நோட்டுகளை சேகரிக்கின்றனர்

பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை (Old Coins) சேகரிப்பதில் பலருக்கு ஆர்வம் அதிகம் உள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்று அதிக பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் 786 என்ற எண் கொண்ட ரூபாய் நோட்டை விற்க விரும்பினால், ஈபே இணையதளத்திற்குச் சென்று விற்கலாம். இந்த இணையதளத்தில் பலர் பழைய நோட்டுகளை விற்று வாங்குகின்றனர்.

786 எண் அதிர்ஷ்ட எண்ணாக கருதப்படுகிறது

இந்தியாவில் பலர் பலவித விஷயங்களில் நம்பிக்கை கொண்டுள்ளனர். பலர் ஒரு குறிப்பிட்ட நிறம், எண் அல்லது ஆடைகளை தங்களுக்கு அதிர்ஷ்டமாகக் கருதுகின்றனர். இதேபோல், 786 என்ற எண்ணும் மிகவும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. பலர் அந்த எண்ணை மங்களகரமானதாகக் கருதுகின்றனர். ஆகையால் அவர்கள் அந்த எண் கொண்ட ரூபாய் நோட்டுகளை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புகிறார்கள்.

ALSO READ: இந்த 10 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்

786 தொடர் ரூபாய் நோட்டுகளை நீங்கள் ஈபேயில் விற்கலாம். Ebay இன் இணையதளத்தில், இந்த எண் கொண்ட 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளை விற்கலாம். முதலில், நீங்கள் விற்பனை செய்ய எண்ணும் ரூபாய் நோட்டுகளின் புகைப்படம் எடுத்து, இணையதளத்தில் ஒரு ப்ரொஃபைலை உருவாக்கி, புகைப்படத்தை போஸ்ட் செய்ய வேண்டும். இங்கே விலைக்கு ஏற்ப இந்த ரூபாய் நோட்டுகள் பட்டியலிடப்பட வேண்டும்.

ரூபாய் நோட்டுகளை இந்த வழியில் விற்கலாம்

- முதலில் www.ebay.com ஐ கிளிக் செய்யவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள ‘பதிவு’ என்பதைக் கிளிக் செய்து உங்களை விற்பனையாளராகப் பதிவு செய்து கொள்ளவும்.
- உங்கள் ரூபாய் நோட்டின் படத்தை எடுத்து தளத்தில் பதிவேற்றவும். பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்க தங்கள் தளத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு ஈபே உங்கள் விளம்பரத்தைக் காண்பிக்கும்.
- ரூபாய் நோட்டுகளை வாங்க ஆர்வமாக இருப்பவர்கள், உங்கள் விளம்பரத்தைப் பார்த்து, பிறகு உங்களைத் தொடர்புகொள்வார்கள்.
- நீங்கள் அவர்களை அணுகி நோட்டுகளை விற்கலாம்.

3 லட்சம் வருமானம் கிடைக்கும்

ஈபே இணையதளத்தில் சில குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகள் ஏலம் எடுக்கப்படுகின்றன. இதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். உங்களின் 786 எண் கொண்ட நோட்டின் விலையை நீங்களே தீர்மானிக்கலாம். இந்த இணையதளத்தில் அத்தகைய நோட்டின் விலை ரூ.3 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: இந்த 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News