வயதான பெற்றோருக்கு மருத்துவ காப்பீடு... ‘இந்த’ விஷயங்களில் கவனம் தேவை!

Health Insurance: பெற்றோருக்கான பொருத்தமான சிறந்த காப்பிட்டு திட்டம் என்பது,  நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் சிறந்த பரிசு என்றால் அது மிகையில்லை. இது அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வரி சேமிப்பு மற்றும் வருடாந்திர உடல நல பரிசோதனைகள் போன்ற பல்வேறு நன்மைகளையும் பெறலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 10, 2022, 11:51 AM IST
  • மருத்துவ காப்பீட்டை சரியான நேரத்தில் புதுப்பிக்க வேண்டும்.
  • பெற்றோருக்கான பொருத்தமான சிறந்த காப்பிட்டு திட்டம் என்பது, நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் சிறந்த பரிசு.
  • வரி சேமிப்பு மற்றும் வருடாந்திர உடல நல பரிசோதனைகள் போன்ற பல்வேறு நன்மைகளையும் பெறலாம்.
வயதான பெற்றோருக்கு மருத்துவ காப்பீடு... ‘இந்த’ விஷயங்களில் கவனம் தேவை!

நம்மை ஆளாக்கிய பெற்றோர்கள் என்றுமே போற்றுதலுக்கு உரியவர்கள்.  பெரும் தியாகங்களை செய்துதான் பெற்றோர்கள் குழந்தைகளை ஆளாக்குகின்றனர். அவர்கள் முதுமை காலத்தில் அவர்களை சிறப்பாக கவனித்துக் கொள்வது நமது கடமை. அதே சமயம் மருத்துவ செலவுகள், நடுத்தர வர்த்தகத்தினர் சமாளிக்க முடியாத அளவில் தான் உள்ளது. நகரத்தில் மருத்துவ மனைக்குள் நுழைந்தாலே நமது சேமிப்புகள் அனைத்தும் காலியாகி விடும். அப்படிப்பட்ட நிலையில் நமது பெற்றோருக்கு, பொருத்தமான ஒரு சிறந்த காப்பீடு எடுப்பதன் மூலம், நாம் நிம்மத்தியாக இருக்கலாம். பெற்றோர்களுக்கும் தேவைப்படும் போது சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கலாம்.நமது வாழ்க்கையையே நமக்காக அர்பணித்த பெ ற்றோருக்கு, நாம் செய்யும் சிறந்த உதவி இதுவாகத் தான் இருக்கும்.

நமது வயதான பெற்றோர்களுக்கு மருத்துவ காப்பீடு எடுக்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. பெற்றோருக்கான சிறந்த உடல்நலக் காப்பீட்டுக் கொள்கையை  வாங்கும்போது, ​​அதன் கவரேஜின் நன்மைகளை விரிவாகப் படிக்கவும். நோய் அல்லது விபத்தின் போது பெற்றோருக்கு சிகிச்சை அளிப்பதில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, இது ஒரு சரியான சுகாதார பேக்கேஜ் தானே என்பதை முழுமையாக சரிபார்க்கவும். இதற்கு, பாலிசி தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கவனமாகப் படிப்பது அவசியம். 

2. மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சை ஆகியவற்றைக் கவர் செய்யும் வசதி உள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். பாலிசியின் கால அளவு என்ன என்பதையும் பார்க்கவும். டே கேர், கடுமையான நோய்களுக்கான பாதுகாப்பு போன்ற அம்சங்கள் உள்ளதா இல்லையா என்பதை உறுதி படுத்திக் கொள்ளவும்.

3. பல பாலிசிகளில், நாள்பட்ட நோய்கள் அல்லது 30 நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட நோய்கள் காப்பீட்டில் சேர்க்கபடுவதில்லை. அத்தகைய பாலிசி எடுப்பதை தவிர்க்கவும்.

4. நாம் தேர்ந்தெடுக்கும் மருத்துவ காப்பீட்டு நிறுவனம், நம்பிக்கைக்கு உரிய நிறுவனமாக இருக்க வேண்டும். அதாவது அவசர காலத்தில் சேவை வழங்குவதிலும், க்ளைகளை செட்டில் செய்வதிலும் பிரச்சனை ஏதும் ஏற்படுத்தாத மருத்துவ காப்பீட்டு நிறுவனமாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | Aadhaar கார்டில் திருத்தம் செய்யுமா? இனி கஷ்டப்படாமல் ஈஸியா செய்யலாம் 

5. வயது அதிகம் ஆக ஆக, மருத்துவ காப்பீட்டை தொடங்குவது கடினம், பல காப்பீட்டு நிறுவனங்கள்  அதிக வயதானவர்களுக்கு புதிதாக காப்பீடு வழங்குவதில்லை. அதனால் நமது பெற்றோருக்கு, சிறிது முன் கூட்டியே மருத்துவ காப்பீட்டை எடுத்து விட வேண்டும். அது தான் பாதுகாப்பானது.

6. மருத்துவ காப்பீட்டை சரியான நேரத்தில் புதுப்பிக்க வேண்டும். அதை தவற விடக்கூடாது. அப்பொழுது தான் அவர்கள் வாழ் நாள் முழுவதற்கும் அந்த காப்பீட்டை தொடர முடியும். தேவைப்பட்டால், ஆட்டோ ரென்யூவல் முறையை தேர்வு செய்யவும். இதனால் காப்பிட்டை புதுப்பிப்பதை தவற விடும் வாய்ப்பு இல்லை.  

7. காப்பீடு எடுப்பதற்கு முன்னதாக இருக்கும் நோய்களுக்கு எந்த அளவிற்கு கவரேஜ் இருக்கும், அதற்அகான விதிமுறைகள் என்ன என்பதை விரிவாக கேட்டு அறிய வேண்டும்.

8. புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய், பக்கவாதம் போன்ற பல நோய்கள் உணர்ச்சி ரீதியாக மட்டுமல்லாமல் நிதி ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் ஆகும். மேலும் இதற்கு நீண்ட கால பராமரிப்பு தேவைப்படுகிறது. எனவே, இதை  கருத்தில் கொண்டு அதற்கேற்ற வகையிலான காப்பீட்டை எடுப்பதன் மூலம் உங்களையும் உங்கள் பெற்றோர்களையும் மன உளைச்சலில் இருந்தும்  நிதிச் சுமையிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

9. நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, காப்பீட்டுத் தொகையை தேர்ந்தெடுக்கவும். பெருநகரத்தை பொருத்தவரை மருத்துவமனை செலவுகள் அதிகமாக இருக்கும்.  அதனை மனதில்வைத்துக் கொண்டு, காப்பீடு செய்யப்பட்ட தொகையை அதிகரித்து கொள்ளலாம்.  இதனால் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் நீங்கள்  நிம்மதியாக பெற்றோருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கலாம்.

உங்கள் பெற்றோருக்கான பொருத்தமான சிறந்த காப்பிட்டு திட்டம் என்பது,  நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் சிறந்த பரிசு என்றால் அது மிகையில்லை. இது அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வரி சேமிப்பு மற்றும் வருடாந்திர உடல நல பரிசோதனைகள் போன்ற பல்வேறு நன்மைகளையும் பெறலாம்.

மேலும் படிக்க | மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பது அவசியம்: ஆன்லைனில் இப்படி இணைக்கலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News