ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது குறித்து முக்கியமான தகவலை வழங்கிய Indian Railways

Indian Railways alert: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி விடுமுறை நாட்களில், தங்கள் கிராமத்திற்கு செல்ல முன்கூட்டியே ரயில் டிக்கெட்டுக்களை பலர் முன்பதிவு செய்வது வழக்கம். ஆனால் டிக்கெட் கிடைக்காதவர்கள் தரகர்களின் ஆசை வாரத்தையில் சிக்கி மோசடிக்கு ஆளாகின்றனர்.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 1, 2021, 04:53 PM IST
  • சொந்த ஊருக்கு போக முன்பதிவு டிக்கெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
  • பலர் தரகர்களின் ஆசை வாரத்தையில் சிக்கி மோசடிக்கு ஆளாகின்றனர்.
  • முன்பதிவு காலத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்தது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது குறித்து முக்கியமான தகவலை வழங்கிய Indian Railways

Indian Railways alert: தீபாவளி, தசரா உட்பட திருவிழாக்கள் வரவுள்ளதால், அதற்கு முன்னதாக ரயிலில் சொந்த ஊருக்கு செல்வதற்காக முன்பதிவு டிக்கெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இதன் காரணமாக ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான காத்திருப்பு (Waiting List) அதிகரித்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி விடுமுறை நாட்களில், தங்கள் கிராமத்திற்கு செல்ல முன்கூட்டியே ரயில் டிக்கெட்டுக்களை பலர் முன்பதிவு செய்வது வழக்கம். முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள், தட்கால் டிக்கெட் முன்பதிவுக்காக பயணிகள் காத்திருக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில், பலர் தரகர்களின் ஆசை வாரத்தையில் சிக்கி மோசடிக்கு ஆளாகின்றனர்.

இது தொடர்பாக, பயணிகளுக்கு வடக்கு ரயில்வே (Northern Railway) மூலம் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதில் பண்டிகை காலங்களில் ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க தரகர்களிடம் (Ticket Brokers) சிக்கிக்கொள்ள வேண்டாம் என வடக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் தீபக் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ரயில்வே கவுன்டர்கள் மற்றும் ரயில்வேயின் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்களிடமிருந்து மட்டுமே பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் அல்லது டிக்கெட் வாங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளர். விரைவில் டெல்லியில் இருந்து பூர்வாஞ்சல் பகுதிகளுக்கு 12 விழா சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.

ALSO READ | Rail tickets: பயணச்சீட்டு சலுகைகள் மீண்டும் தரப்படுமா? குழப்பத்தை தீர்த்த இந்தியன் ரயில்வே

கொரோனா தொற்று (COVID-19 pandemic) காரணமாக, அனைத்து ரயில்களும் இன்னும் இயக்கப்படவில்லை. பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு ரயில்வே புதிய மற்றும் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. வரவிருக்கும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வேயும் ரயில்களின் எண்ணிகையை அதிகரிக்க உள்ளது. 

ஒவ்வொரு வருடமும் பண்டிகை நாட்களில் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, பண்டிகை காலத்தில் சிறப்பு ரயில்களை (Festive Season Train List), இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, 40 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே சமீபத்தில் கூறியுள்ளது. சில ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, மற்ற ரயில்களின் விவரம் வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.

பயணிகளுக்கு அதிக விலைக்கு டிக்கெட்டுகளை தரகர்கள் விற்கிறார்கள். மற்றவர்களின் டிக்கெட்டை வேறொருவருக்கு கொடுப்பது, போலி டிக்கெட் விற்பது போன்ற மோசடியில் தரகர்கள் ஈடுபடுகின்றனர் என பல புகார்கள் வந்துள்ளன. ரயில்வே அவ்வப்போது பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த ஆண்டு இந்திய ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு (Tickets Reservation) செய்வதற்கான முன்பதிவு காலத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | ரயில் பயணத்தின் போது உங்கள் ரயில் டிக்கெட்டை யாரெல்லாம் செக் பண்ண முடியாது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News