3AC Economy Class: AC வகுப்பில் இனி மலிவான கட்டணத்தில் ரயில் பயணம் செய்யலாம்

3AC Economy Class: ரயிலில், மலிவான கட்டணத்தில் ஏசி வகுப்பில் பயணிக்கும் மக்களின் கனவு இப்போது நிறைவேறலாம். 3ஏசி எகானமி வகுப்பு கட்டணத்தில் ரயில்வே ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 28, 2021, 11:39 AM IST
  • கட்டணம் 3AC வகுப்பை விட குறைவாக இருக்கும்
  • 800 ரயில் பெட்டிகளை தயாரிக்க திட்டம்
  • ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
3AC Economy Class: AC வகுப்பில் இனி மலிவான கட்டணத்தில் ரயில் பயணம் செய்யலாம் title=

Indian Railways: ஏசி வகுப்பில் மலிவான கட்டணத்தில் சாதாரணம மக்களும் இனி ரயில் சுகமாக பயணத்தை அனுபவிக்க முடியும். 3ஏசி எகானமி வகுப்பின் கட்டணத்தை இந்திய ரயில்வே நிர்ணயித்துள்ளது. இந்த சேவையை நோக்கி மக்களை ஈர்க்க, அதன் கட்டணம் ((AC 3 Economy Class Fare) ஏசி 3 கட்டணத்தை விட குறைவாக இருக்கும்.

கட்டணம் 3AC வகுப்பை விட குறைவாக இருக்கும்

ஏசி 3 எகானமி வகுப்பிற்கான கட்டணத்தை அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் ஏசி 3வது வகுப்பின் கட்டணத்தை விட அதன் கட்டணம் சுமார் 8 சதவீதம் குறைவாக இருக்கும் என்று நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்யும் மக்கள் இந்த புதிய எகானமி வகுப்பில் பயணம் செய்ய விரும்புவார்கள்

800 ரயில்வே பெட்டிகளை தயாரிக்கத் திட்டம் 
தகவலின் படி, பஞ்சாபின் கபூர்தலா ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் ஏசி 3 எகனாமி வகுப்பின் 50 பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த பெட்டிகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில்வே மண்டலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுபோன்ற 800 பெட்டிகளைத் தயாரிக்க ரயில்வே (Indian Railway) திட்டமிட்டுள்ளது. இதில், 300 பெட்டிகள் சென்னையில் ரயில்வே பெட்டி தொழிற்சாலையிலும், ராய்பெரிலி மாடர்ன் ராயி பெட்டி தொழிற்சாலையில் 285 பெட்டிகளும், கபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையில் 177 ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்படும்.

ALSO READ | Indian Railways: இப்போது ‘வேறு ஒருவரும்’ உங்கள் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்..!!

ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது

வழக்கமாக, ஏசி 3 மற்றும் ஸ்லீப்பர் வகுப்புகளில் 72 பெர்த்துகள் உள்ளன, ஆனால் ஏசி 3 எகனாமி வகுப்பில் 83 பெர்த்துகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, பக்கவாடில் உள்ள 2 பெர்த்துகள் 3 பெர்த்துகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால், AC3 எகானமி வகுப்பில் பெர்த்துகளின் எண்ணிக்கை 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால், கட்டணத்தை குறைப்பதன் மூலம், ரயில்வே அதன் பயனை பயணிகளுக்கு திருப்பித் அளிக்க விரும்புகிறது.

ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள் குறைவாக இருக்கும்

ஏசி 3 வகுப்பை தவிர, மற்ற அனைத்து வகுப்புகளிலும் ஒவ்வொரு ஆண்டும் 20-25% வரை ரயில்வே இழப்பைச் சந்தித்து வருகிறது. எனவே, ஏசி 3 வகுப்பை படிப்படியாக மேம்படுத்தி டிக்கெட் விலையை குறைத்து பயணிகளை ஈர்க்க ரயில்வே விரும்புகிறது. அதனால் ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்யும் மக்கள் இன்னும் கொஞ்சம் அதிகம் செலவு செய்து 3AC எகனாமி வகுப்பில் பயணம் செய்யலாம். ரயில்களில் ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகளை படிப்படியாக குறைத்து 3AC எகானமி கிளாஸ் பெட்டிகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

ALSO READ | Indian Railways: டிக்கெட் புக் செய்கையில் நினைவில் கொள்ள வேண்டிய புதிய குறியீடுகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News