Good News: அனைத்து பயணிகள் ரயில்களும் பிப்ரவரி 1 முதல் இயக்கப்படும்!

அனைத்து பயணிகள் ரயில்களும் பிப்ரவரி 1 முதல் இயக்கப்படும் என வெளியான செய்தி முற்றிலும் போலியானது என இந்திய ரயில்வே தெரிவித்ததுள்ளது!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2021, 11:37 AM IST
Good News: அனைத்து பயணிகள் ரயில்களும் பிப்ரவரி 1 முதல் இயக்கப்படும்! title=

அனைத்து பயணிகள் ரயில்களும் பிப்ரவரி 1 முதல் இயக்கப்படும் என வெளியான செய்தி முற்றிலும் போலியானது என இந்திய ரயில்வே தெரிவித்ததுள்ளது!!

பிப்ரவரி 1 முதல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பயணிகள் ரயில்கள் இயக்கத் தொடங்கும் என்று ஊடகங்களில் ஒரு விவாதம் நடைபெறுகிறது. ஆனால், இந்த அறிக்கைகளை இந்திய ரயில்வே மறுத்ததுடன், இந்த செய்திகளை இந்திய ரயில்வே (Indian Railways) போலி செய்திகள் எனவும் கூறியுள்ளது. 

இதுபோன்ற பல செய்திகள் சமூக ஊடகங்களில் (Social Media) அதிகமாக வைரலாகி வருகின்றன. அதில், பிப்ரவரி 1 முதல் பயணிகள் ரயில்கள் (Passenger Train) நாட்டில் இயக்கத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

அரசின் உண்மை அறியும் சமூக வலைதளமான PIB ட்விட்டர் பக்கத்தில், "இந்த செய்தி முற்றிலும் போலியானது" என்று குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற எந்த அறிவிப்பையும் ரயில்வே அறிவிக்கவில்லை. ரயில்கள் எப்போது இயல்பாக இயங்கும் என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்று இந்திய ரயில்வே (Indian Railway) தெரிவித்துள்ளது. பயணிகள் ரயில்களை இயக்குவது குறித்து ரயில்வே அமைச்சகம் ஒரு முடிவை எடுக்கும். அமைச்சகம் இது குறித்த ஒரு முடிவை எடுக்கும் போது, இது தொடர்பாக ரயில்வே அதிகாரப்பூர்வ தகவல்கள் வழங்கப்படும்.

PIB இந்த தகவலை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது 

அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது., "உரிமைகோரல்: ஒரு #Morphed புகைப்படத்தில், 2021 பிப்ரவரி 1 முதல் அனைத்து பயணிகள் ரயில்கள், உள்ளூர் ரயில்கள் மற்றும் பயணிகள் சிறப்பு ரயில்களைத் தொடங்க ரயில்வே வாரியம் அறிவித்ததாகக் கூறப்படுகிறது.

#PIBFactCheck: இந்த கூற்று போலியானது. @RailMinIndia இதுபோன்ற எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை" என குறிப்பிட்டுள்ளது.  

ALSO READ | இந்த வழியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 50% தள்ளுபடி கிடைக்கும்!!

நீங்கள் இது போன்ற செய்திகளை மறுபரிசீலனை செயலாம்

நீங்கள் அத்தகைய செய்தியைப் பெற்றால், https://factcheck.pib.gov.in/ அல்லது வாட்ஸ்அப் எண் +918799711259 அல்லது மின்னஞ்சல்: pibfactcheck@gmail.com என்ற முகவரியில் உண்மைச் சரிபார்ப்புக்காக அதை PIB-க்கு அனுப்பலாம். இந்த தகவல் PIB வலைத்தளமான https://pib.gov.in-ல் கிடைக்கிறது.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News