சுமத்ரா யானையின் மீது நிர்வாணமாக படுத்தபடி போஸ் கொடுத்த பிரபலம் மீது, இயற்கை ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அந்தவகையில், சுமத்ரா யானையின் மீது நிர்வாணமாக படுத்தபடி போஸ் கொடுத்த பிரபலம் மீது, இயற்கை ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய நாட்டை சேர்ந்த சோசியல் மீடியா (Russian social media) பிரபலமும், முன்னாள் டென்னிஸ் வீரர் யெவ்ஜெனி கபெல்னிகோவின் (Yevgeny Kafelnikov) மகள் அலிஸ்யா கபெல்னிகோ (Alesya Kafelnikova). இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள அரிய வகை சுமத்ரா யானையின் (Sumatran elephant) மீது நிர்வாணமாக படுத்தபடி கொடுத்த போஸ், இயற்கை மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
AlesyaKafelnikova
sekarang udah banyak Orang asing PANSOS di INDONESIA.
apa ini kerja Intel mereka dr dulu ingin ku berkata GOBLOGGGG#LihatDenganJernih pic.twitter.com/U8VA9xifFC— ANTON RASI (@ANTONRASI2) February 18, 2021
இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், அலிஸ்யா (Alesya Kafelnikova), நிர்வாணமாக, அந்த யானை மீது படுத்தபடி போஸ் கொடுக்கிறார். இந்த வீடியோவை பார்த்தவர்கள், இது அந்த விலங்கின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கருத்து தெரிவித்துள்ளனர். பணத்திற்காக என்ன வேண்டுமென்றாலும் இவரை போன்றவர்கள் செய்வார்கள் என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளனர். யானை மீதான அழகியல் உணர்வின் வடிவமாகவே (Natural vibes), இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளதாக அலிஸ்யா தெரிவித்துள்ளார்.
இந்த இன்ஸ்டாகிராம் (Instagram page) போட்டோ மற்றும் வீடியோ மூலம் கிடைத்த பணத்தை கொண்டு, உள்ளூர் மக்களுக்கு உதவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யானைகள் மீதான நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள அலிஸ்யா கபெல்னிகோ, 2015 ஆம் ஆண்டில் மாடலாக தனது வாழ்க்கையை துவக்கி, பின் இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும், போட்டோகிராபி மாடலாகவும் உள்ளார்.
எல்லே மற்றும் வோக் பத்திரிகைகளின் அட்டைப்படத்தில் இவரது போட்டோ இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அலிஸ்யா கபெல்னிகோ, தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீசிலும், பிரிட்டனின் லண்டனிலும் பெரும்பாலான பொழுதை கழித்து வருகிறார்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR