புதுடெல்லி: பீர் (Beer) குடிக்கும் பழக்கம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ளது. பல பிராண்டுகள் வந்து போயின ஆனால் மாறாத ஒன்று பீர் பாட்டிலின் நிறம் (Beer Bottle Colour). எந்த பிராண்டை எடுத்துக் கொண்டாலும், பீர் பாட்டில்களின் நிறம் எப்போதும் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு பின்னால் என்ன காரணம் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பீர் பாட்டில் தொடர்பான இந்த முக்கியமான, சுவாரஸ்யமான விஷயத்தை தெரிந்து கொள்வோம்.
முதல் பீர் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக
வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் கூறுகின்றன. அதாவது பீர் (Beer) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. உலகின் முதல் பீர் நிறுவனம் பண்டைய எகிப்தில் திறக்கப்பட்டதாக கூறப்படுகின்றன. அந்த நேரத்தில் பீர் பானம், நிறம் ஏதும் இல்லாத சாதாரண பாட்டில்களில் விற்கப்பட்டது, ஆனால் சூரியனின் கதிர்கள் அந்த பாட்டில்களில் ஊடுருவி செல்வதால் பீர் சீக்கிரம் கெட்டுப் போனது. வீரியம் நிறைந்த அல்ட்ரா-வயலட், அதாவது புற ஊதா கதிர்கள் காரணமாக, பீர் பானத்தில் ஒரு விதமான கெட்டுப் போன வாசனை வர ஆரம்பித்தது. பின்னர் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட ஒரு தீர்வு வேண்டும் என தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.
ALSO READ | Health Tips: உடல் எடை குறைய ஓமம் -சீரகம் அடங்கிய ‘மேஜிக் பானம்’
சூரிய ஒளியின் காரணமாக பீர் கெட்டுப் போவதை தடுக்க, பீர் தயாரிப்பாளர்கள் ஒரு யோசனை செய்தனர். சூரியனின் புற ஊதா கதிர்களால் பாதிக்கப்படாத வகையிலான பாட்டிலில் பீர் நிரப்ப முடிவு செய்தார். இதற்கு, பழுப்பு நிற பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டு அவை சிறந்த பலன்களைக் கொடுத்தன.
பல வருடங்களுக்குப் பிறகு, இரண்டாம் உலகப் போரின்போது பழுப்பு பாட்டில்கள் கிடைக்காததால் பீர் பாட்டில்கள் பச்சை பாட்டில்களில் அடைக்கப்பட்டன. பீர் நிறுவனங்கள் பின்னர் பச்சை நிற பாட்டில்களையும் பயன்படுத்த தொடங்கின. ஏனெனில் இவற்றில் கூட சூரியனின் வலுவான கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்பு மிக மிக குறைவு.
ALSO READ | Health Tips: முதுமையை தள்ளிப்போட வேண்டுமா; ‘இந்த’ பழக்கங்கள் கூடாது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR