சர்வதேச மகளிர் தின கதைகள் சொல்லும் கூகுள் டூடுல்!

அனைத்துலக மகளிர் தினம் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8-ம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 23, 2018, 03:50 PM IST
சர்வதேச மகளிர் தின கதைகள் சொல்லும் கூகுள் டூடுல்! title=
அனைத்துலக மகளிர் தினம் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8-ம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.
 
 
1789ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்.[2] ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். 
 
புயலாகக் கிளம்பிய பூவையரைத் துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. 
 
அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். 
 
உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடி துறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. 
 
பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். 
 
அந்த நாள் 1848-ம் ஆண்டு மார்ச் 8. அந்நாள் தான் அனைத்துலகப் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து மார்ச் 8-ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
 
கூகுள் நிறுவனம் டூடுல் மகளிர் தினம் ஸ்பெஷல்:-
 
 
இந்த நிலையில் மகளிர் தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் பெண்களுக்காக சிறப்புப் டூடுல் வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது. கூகுள் வெளியிட்ட டூடுலை கிளிக் செய்தால்  பல பெண்களின் வாழ்க்கை அனுபவங்கள் அடங்கிய புகைப்படத் தொகுப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அவற்றில் ஒன்றை நீங்கள் கிளிக் செய்தால் அப்பெண்களின் கதைகள் அடங்கிய தொகுப்பு காட்சிகளாக நகர்கின்றன.
 

1. Anna Haifisch - Nov 1989

 

 

2. Chihiro Takeuchi - Ages and Stages

 

 

3. Esteli Meza - My Aunt Blossoms

 

 

4. Francesca Sanna - The Box

5. Isuri - Aarthi the Amazing

6. Karabo Poppy Moletsane - Ntsoaki's Victory

7. Kaveri Gopalakrishnan - Up on the Roof

8. Laerte - Love

9. Philippa Rice - Trust

10. Saffa Khan - Homeland

11. Tillie Walden - Minutes

12. Tunalaya Dunn - Inwards

 

Trending News