IRCTC: இந்த முறையில் புக் செய்தால் தட்கல் டிக்கெட்கள் கண்டிப்பாக கிடைக்கும்!

IRCTC Tatkal train ticket: ஐஆர்சிடிசி தனது பயணிகளை அவர்களின் பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாக ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது.    

Written by - RK Spark | Last Updated : May 19, 2023, 06:40 AM IST
  • ஐஆர்சிடிசி தட்கல் முன்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணத்தை வசூலிக்கிறது,
  • ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
  • வழக்கமான டிக்கெட்டுகளை விட தட்கல் டிக்கெட்டுகளின் விலை அதிகமாக உள்ளது.
IRCTC: இந்த முறையில் புக் செய்தால் தட்கல் டிக்கெட்கள் கண்டிப்பாக கிடைக்கும்! title=

IRCTC Tatkal train ticket: ரயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்வதால் இந்திய ரயில்வேயில் உறுதிசெய்யப்பட்ட ரயில் டிக்கெட்டைப் பெறுவது பெரும்பாலும் கடினமான ஒன்றாகவே இருந்து வருகிறது, அதிலும் குறிப்பாக கடைசி நிமிட முன்பதிவு என்பது சவாலான ஒன்றாக இருக்கிறது.  ஐஆர்சிடிசி தனது பயணிகளை அவர்களின்  பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது.  இந்தத் திட்டத்தின் கீழ், ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் உடனடி அல்லது அவசர ரயில் முன்பதிவுகளுக்காக இருக்கைகளை பயணிகள் முன்பதிவு செய்யலாம்.  பெரும்பாலான மக்கள் தட்கல் டிக்கெட்டுகளையே அதிகளவில் புக் செய்கின்றனர், தட்கல் டிக்கெட்டுகள் தேவை அதிகமாக இருப்பதாலும், இது குறைந்த அளவே கிடைப்பதாலும், டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வது சவாலானதாக இருக்கக்கூடும். தட்கல் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு பக்கத்தை ஐஆர்சிடிசி அதன் உண்மையான நிலையத்திலிருந்து ரயிலின் பயணம் தொடங்கும் தேதிக்கு ஒரு நாள் முன்பாக திறக்கிறது.  இதில் இருக்கைகள் குறைவாக இருப்பதால் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டைப் பெறுவது கடினமாக இருக்கும்.

மேலும் படிக்க | ரயில்வே ஸ்டேஷன் ஒன்று... ஆனால் மாநிலங்கள் இரண்டு... இந்தியாவின் வினோத ரயில் நிலையம்!

ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு (2A/3A/CC/EC/3E) காலை 10:00 மணிக்கு திறக்கிறது.  அடுத்ததாக ஏசி அல்லாத வகுப்பிற்கான தட்கல் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு (SL/FC/2S) காலை 11:00 மணிக்கு திறக்கிறது.  ஐஆர்சிடிசி தட்கல் முன்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணத்தை வசூலிக்கிறது, இவை வழக்கமான டிக்கெட்டுகளை விட அதிகமாக உள்ளது.  உதாரணமாக, ஒரு வழக்கமான டிக்கெட்டின் விலை ரூ. 900 எனில், அதே பயணத்திற்கான தட்கல் டிக்கெட்டின் விலை சுமார் ரூ. 1300 இருக்கும்.  

ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தல்:

1) irctc.co.in எனும் ஐஆர்சிடிசி-ன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

2) உங்கள் ஐஆர்சிடிசி பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி லாக் இன் செய்ய வேண்டும்.  உங்களிடம் கணக்கு இல்லையென்றால், "சைன் அப்" என்கிற பட்டனை கிளிக் செய்து, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

3) "புக் டிக்கெட்" என்கிற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

4) "தட்கல்" முன்பதிவு ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, மூல மற்றும் சேருமிட நிலையங்கள், பயணத் தேதி, ரயில் மற்றும் வகுப்பு உட்பட தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்.

5) முன்பதிவு செய்வதற்கான பயணிகளின் விவரங்களை உள்ளிட வேண்டும்.

6) பெர்த் விருப்பத்தையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம், ஆனால் குறைந்த படுக்கைகள் பொதுவாக வயதான பயணிகளுக்கு வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

7) கட்டணம் மற்றும் பிற விவரங்களை மதிப்பாய்வு செய்து, பின்னர் கட்டணம் செலுத்தும் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

8) கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், யூபிஐ அல்லது கிடைக்கக்கூடிய பிற ஆப்ஷன்களை பயன்படுத்தி கட்டண விருப்பத்தைத் தேர்வுசெய்ய வேண்டும்.

9) முன்பதிவு விவரங்களை உறுதி செய்து பணம் செலுத்த வேண்டும்.

10) வெற்றிகரமாக பணம் செலுத்திய பிறகு, இ-டிக்கெட்டை டவுன்லோடு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | ரயில்வே டிக்கெட்டை வேறொருவரின் பெயருக்கு மாற்ற முடியுமா.. விதிகள் கூறுவது என்ன...!

ஐஆர்சிடிசி செயலி மூலம் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு:

1) உங்கள் ஸ்மார்ட்போனில் ஐஆர்சிடிசி செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.

2) உங்கள் ஐஆர்சிடிசி கணக்கில் லாக் இன் செய்ய வேண்டும்.

3) "தட்கல் முன்பதிவு" ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

4) உங்கள் ரயில் மற்றும் பயணத் தேதியைத் தேர்வு செய்யவேண்டும்.

5) தேவையான பயணிகள் விவரங்களை நிரப்பவும்.

6) நீங்கள் விரும்பும் இருக்கை வகுப்பு மற்றும் பெர்த் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

7) கட்டண விவரங்களைச் சரிபார்த்து, முன்பதிவை உறுதிப்படுத்தவும்.

8) கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தி,
கட்டண நிலையைச் சரிபார்த்து, உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்க வேண்டும்.

9) கட்டணம் உறுதிசெய்யப்பட்டதும், செயலியிலிருந்து டிக்கெட்டைப் டவுன்லோடு செய்யவும்.

உறுதி செய்யப்பட்ட தட்கல் டிக்கெட்டைப் பெறுவதற்கான வழிகள்:

உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டை நீங்கள் முன்பதிவு செய்ய விரும்பினால், புறப்படும் தேதிக்கு குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்பாகவோ அல்லது அதற்கு முன்னதாகவோ முன்பதிவு செய்யவும். கணினி, லேப்டாப் அல்லது ஸ்மார்ட்போன் போன்ற உங்களிடம் இருக்கும் பல சாதனங்களையும் பயன்படுத்தி விரைவாக டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்கள்.  வேகமான இணைய இணைப்பு உங்கள் டிக்கெட்டை விரைவாகப் பதிவுசெய்ய உதவும்.  எனவே டிக்கெட்டை முன்பதிவு செய்யத் தொடங்கும் முன், உங்களிடம் நல்ல இணைய இணைப்பு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.  உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, ​​குறைந்த பெர்த்களைத் தேர்வுசெய்ய முயற்சி செய்யுங்கள்.  முதல் முயற்சியிலேயே உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் விட்டுவிடாதீர்கள், தொடர்ந்து முயற்சி செய்து உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை பெறுங்கள்.

மேலும் படிக்க | BSNL-ன் அற்புதமான திட்டம்! 100Mbps இணைய வேகம் மற்றும் ஒரு வருடத்திற்கு இலவச OTT..!

Trending News