2022-2023 நிதியாண்டு முடிவடைய இன்னும் சில காலங்களே இருப்பதனால், FY23க்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது கூடுதல் விலக்குகளைப் பெறுவதற்கான பயனுள்ள வழிகளை தெரிந்துகொள்ளலாம்.
ஒரு நிதியாண்டில் வரி விலக்கு (டிடிஎஸ்) மற்றும் வரி வசூல் (டிசிஎஸ்) ரூ.25,000 அல்லது அதற்கு மேல் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஐடிஆர் தாக்கல் செய்வது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி, பிபிஎஃப், குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம், தேசிய சேமிப்புச் சான்றிதழ், வீட்டுக் கடன் ஆகியவற்றை வைத்து மீது 80சி பிரிவு கீழ் வரிவிலக்கு பெறலாம்.
வரியை செலுத்த தவறியதற்கான வட்டியை கணக்கிட வரி செலுத்துபவர்கள் ஒரு நிதியாண்டில் பெற்ற டிவிடெண்ட் வருமானத்தை காலாண்டு வாரியாகப் பிரிக்க வேண்டும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.