ரிலையன்ஸ் ஜியோ OTT சலுகைகளுக்கு ஈடு கொடுக்க கூடுதல் முதலீடு தேவை..!
கொரோனா தொற்றுநோய் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன, திரைப்பட தயாரிப்பாளர்களில் பெரும்பாலானோர் OTT நிறுவனங்களுடன் இணைந்துள்ளனர். குறிப்பாக, அனைத்து பெரிய தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தங்கள் புதிய திரைப்படங்களை வெளியிட நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆகியவற்றைப் பார்க்கிறார்கள்.
இதேபோல், தொலைதொடர்பு ஆபரேட்டர்களும் இந்த சூழ்நிலையைச் சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள், ஏனெனில் அவர்கள் இந்த முன்னணி OTT நிறுவனங்களுடன் கைகோர்த்து வருகின்றனர். சமீபத்தில், ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.399 விலையிலான போஸ்ட்பெய்டு திட்டம் நெட்ஃபிலிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் பலவற்றிலிருந்து உள்ளடக்கத்தை வழங்குகிறது.
இது தவிர, இந்த திட்டம் 75GB தரவு, வரம்பற்ற அழைப்பு வசதி மற்றும் SMS ஆகியவற்றை ஒரு மாதத்திற்கு வழங்குகிறது. இது 200GB டேட்டா ரோல்ஓவர் வசதியையும் வழங்குகிறது, இதன் பொருள் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீண்டும் விலை யுத்தத்தைத் தொடங்கியுள்ளன. மேலும், இந்த நேரத்தில் இந்த தளங்களின் மூலம் உள்ளடக்கத்தை வழங்க அவர்கள் போராடுகிறார்கள்.
ALSO READ | Instagram Reels-ல் புதிய அம்சம் அறிமுகம்... இனி 30 விநாடி வரை வீடியோ பதிவு செயலாம்!
“ரிலையன்ஸ் ஜியோவின் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் அதிக உள்ளடக்கத்தை வழங்குகின்றன, மேலும் அவை 20 சதவீத தள்ளுபடியில் வருகின்றன” என்று ஜெஃப்பெரிஸ் இந்தியா ஆய்வாளர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும், ஏர்டெல் வழங்கும் ரூ.499 நுழைவு நிலை திட்டம் மற்றும் நெட்ஃபிலிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார் அணுகல் இல்லாமல் இதே போன்ற சலுகைகளை வழங்குகின்றன, அதே நேரத்தில் வோடபோன்-ஐடியாவின் ரூ.399 விலையிலான போஸ்ட்பெய்ட் திட்டம் எந்த OTT பயன்பாட்டுக்கான அணுகலும் இல்லாமல் 40GB தரவை மட்டுமே வழங்குகிறது.
இதற்கிடையில், ICICI செக்யூரிட்டீஸ், அத்தகைய இலவசங்களை வழங்காத நிறுவனங்கள் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என்று கூறியுள்ளது. இந்த சலுகைகளை வழங்கினால், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (VIL)-க்கு கூடுதல் வருடாந்திர செலவுகள் ஏற்படக்கூடும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.