எஸ்பிஐ வங்கியில் புதிய வேலை வாய்ப்பு - 5000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்

எஸ்பிஐ வங்கியில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 5000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 18, 2022, 01:17 PM IST
  • பாரத ஸ்டேட் வங்கியில் வேலை வாய்ப்பு
  • 5000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்
  • 27ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்
எஸ்பிஐ வங்கியில் புதிய வேலை வாய்ப்பு - 5000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் title=

பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆனது Clerk (Junior Associates) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 5486 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Clerk (Junior Associates) பணிக்கென மொத்தம் 5486 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs.17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550- 1730/7-42600-3270/1-45930-1990/1-47920 என்னும் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | UPI மூலம் பணம் செலுத்தும் போது இந்த விஷயங்களை மறந்துடாதீங்க!

விண்ணப்பக்கட்டணம்:

General/ OBC/ EWS – ரூ.750

SC/ ST/ PwBD/ ESM/DESM – விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு Phase-I (Preliminary Examination) மற்றும் Phase – II (Main Examination) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | RTO Online Services: வீட்டில் இருந்தபடியே டிரைவிங் லைசன்ஸ் வாங்கலாம்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் https://www.sbi.co.in/documents/77530/25386736/060922-JA+2022-Detailed+A... என்ற தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | சிறைத்துறையில் வேலை வேண்டுமா?... உடனே விண்ணப்பியுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News