மீண்டும் நடிகை சாவித்ரியாக அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்!

நடிகை சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ், மற்றொரு படத்தில் மீண்டும் சாவித்ரியா நடிக்க இருக்கிறார்.

Updated: Jul 3, 2018, 04:50 PM IST
மீண்டும் நடிகை சாவித்ரியாக அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்!

நடிகை சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ், மற்றொரு படத்தில் மீண்டும் சாவித்ரியா நடிக்க இருக்கிறார்.

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான திரைப்படம் நடிகையர் திலகம். 

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரி கதாபாத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் அவரது மாறுபட்ட நடிப்பின் மூலம் அவர் அனைவரையும் கவர்ந்தார். 

தற்போது இன்னொரு முறை சாவித்திரியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. முன்னாள் ஆந்திர முதல்வரும் நடிகருமான என்.டி.ஆரின் வாழ்க்கையை அவரது மகன் பாலகிருஷ்ணா திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறார். படத்தை இயக்க இருப்பது தெலுங்கு இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி.

நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தியின் அபார நடிப்புத் திறனைக் கண்டு வியந்த கிருஷ் தான் இயக்கும் என்டிஆர் வாழ்க்கை படத்துக்காக மீண்டும் ஒருமுறை கீர்த்தியை சாவித்திரியாக்க முடிவெடுத்து இருக்கிறார்.