Aadhaar Update: ஆதார் e-KYC கட்டணத்தில் முக்கிய மாற்றம்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாடிக்கையாளர்களுக்கான ஆதார் சரிபார்ப்பு தொகையை ரூ.20ல் இருந்து ரூ.3 ஆக குறைத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 6, 2022, 09:03 AM IST
  • ஆதார் விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
  • நாட்டில் ஆதார் கட்டாய ஆவணம் என்பது அனைவரும் அறிந்ததே.
  • ஆதார் சரிபார்ப்பு கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.3 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
Aadhaar Update: ஆதார் e-KYC கட்டணத்தில் முக்கிய மாற்றம்..!! title=

புதுடெல்லி: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாடிக்கையாளர்களுக்கான ஆதார் சரிபார்ப்பு தொகையை ரூ.20ல் இருந்து ரூ.3 ஆக குறைத்துள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய UIDAI தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சவுரப் கர்க், இது குறித்து தகவல் அளித்ததோடு, நிதி திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் ஆதாரை சிறந்த வகையில் பயன்படுத்திக் கொள்ள தொழில்நுட்பத் துறையில் அபரிமிதமான சாத்தியங்கள் இருப்பதாக கூறினார்.

சரிபார்ப்பு கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.3 ஆக குறைக்கப்பட்டது

சவுரப் கார்க் கூறுகையில், 'சரிபார்ப்புக்கான கட்டணத்தை ரூ.20ல் இருந்து ரூ.3 ஆக குறைத்துள்ளோம். அரசாங்கம் உருவாக்கியுள்ள டிஜிட்டல் உள்கட்டமைப்பை பல்வேறு ஏஜென்சிகள் மற்றும் நிறுவனங்கள் சிறப்பாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். மக்களுக்கான சேவைகள் எளிதாக கிடைக்க செய்ய டிஜிட்டல் உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்துவது அவசியம்’ என்றார்.

ALSO READ | ஆதார் கார்ட் இருக்கா? அப்போ சுலபமா தனிநபர் கடன் பெற முடியும்: முழு விவரம் இதோ

99 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர்

இதுவரை, e-KYC (Know Your Customer) என்னும், ஆதார் எண் சர்பார்ப்பு முறை 99 கோடி  என்ற அளவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. UIDAI யாருடனும் பயோமெட்ரிக்ஸைப் பகிர்ந்து கொள்ளாது. மேலும் UIDAI போலவே அதன் அனைத்து கூட்டு நிறுவனங்களும் அதே அளவிலான பாதுகாப்பு மற்றும் தனியுரிமையைப் பராமரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும், புதிய ஆதார் அட்டை பெற பணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், பெயர், முகவரி, பிறந்த தேதி, மின்னஞ்சல் போன்றவற்றில் திருத்தம் போன்ற ஆதார் தகவல் புதுப்பிப்புக்கு கட்டணம் செலுத்த வேண்டும். டெமோகிராஃபிக் அப்டேட் செய்வதற்கு 50 ரூபாயும், பயோமெட்ரிக் அப்டேட்டிற்கு 100 ரூபாயும் செலுத்த வேண்டும்.

ஆதார் கட்டாய ஆவணம்

நாட்டில் ஆதார் கட்டாய ஆவணம். மத்திய அரசு அனைத்து திட்டங்களையும் ஆதாருடன் இணைத்துள்ளது.  மத்திய அரசின்  54 அமைச்சகங்களின், சுமார் 311 திட்டங்கள் ஆதாரைப் பயன்படுத்தி நேரடி பலன் பரிமாற்ற (DBT) தளத்தின் கீழ் உள்ளன.

உதாரணத்திற்கு விவசாயிகளுக்காக அரசாங்கம் கொண்டு வந்துள்ள திட்டங்கள்- PM-Kisan Nidhi Yojana போன்ற ஆதார் தளத்தை அடிப்படையாகக் கொண்டது, இதன் கீழ் சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் 2000 ரூபாய் பரிமாற்றம் செய்யப்படுகிறது. ஒரு திட்டத்தின் பயனாளியை சரியாக அடையாளம் காண ஆதார் எண் பயன்படுத்தப்படும் நிலையில், ஆதார் சரிபார்ப்பு என்பது அவசியமாகிறது. இதனால், மோசடிகள், தவறான நபருக்கு பலன்கள் செல்லுதல் ஆகியவை தவிர்க்கப்படுகின்றன.

ALSO READ | Aadhaar Card: மக்களுக்கு நல்ல செய்தி அளித்தது UIDAI, இனி பணிகள் இன்னும் சுலபமாகும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News