2022-ன் அதிர்ஷ்டக்கார பெண்கள் இவர்கள்தான்: இந்த ராசியில் பிறந்த பெண்ணா நீங்கள்?

குறிப்பிட்ட சில ராசிகளை சேர்ந்த பெண்களுக்கு இந்த வருடம் மிகவும் சிறப்பானதாக அமையும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 4, 2022, 06:26 PM IST
  • ஆண், பெண் என்று பாலினத்தின் அடிப்படையிலும் ஜோதிடக் கணக்கீடுகள் செய்யப்படுகின்றன.
  • குறிப்பிட்ட சில ராசிகளை சேர்ந்த பெண்களுக்கு இந்த வருடம் மிகவும் சிறப்பானதாக அமையும்.
  • இந்த ராசி பெண்களை அதிர்ஷ்டம் ஆதரிக்கும், வாழ்க்கை பிரகாசிக்கும்.
2022-ன் அதிர்ஷ்டக்கார பெண்கள் இவர்கள்தான்: இந்த ராசியில் பிறந்த பெண்ணா நீங்கள்? title=

Horoscope 2022: புத்தாண்டு பிறந்துவிட்டது. ஜோதிடக் கணக்கீடுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு சிலருக்கு அமோகமாக இருக்கும், சிலருக்கு சுமாராக இருக்கும். 

ஆண், பெண் என்று பாலினத்தின் அடிப்படையிலும் ஜோதிடக் கணக்கீடுகள் செய்யப்படுகின்றன. இதன்படி குறிப்பிட்ட சில ராசிகளை (Zodiac Sign) சேர்ந்த பெண்களுக்கு இந்த வருடம் மிகவும் சிறப்பானதாக அமையும். இந்த வருடத்தில் அதிர்ஷ்டம் அலையாய் அடிக்கப்போகும் பெண்கள் யார் என இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசி பெண்களை அதிர்ஷ்டம் ஆதரிக்கும், வாழ்க்கை பிரகாசிக்கும்

மேஷம் (Aries):

மேஷ ராசி பெண்களுக்கு 2022 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல நினைத்திருந்தால், அந்த கனவும் இந்த வருடம் நிறைவேறும்.

கடகம் (Cancer):

கடக (Cancer) ராசி பெண்களுக்கு, இந்த ஆண்டு பல கனவுகள் மற்றும் ஆசைகள் நிறைவேறும். திருமணம் தாமதமான பெண்களுக்கு இந்த ஆண்டு திருமணம் கைகூடும். பணியிடத்திலும் தொழிலிலும் நல்ல ஏற்றம் ஏற்படும். 

ALSO READ | 2022-ஆம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகள்: இவர்களுக்கு இந்த ஆண்டு ராஜ யோகம்!!

கன்னி (Virgo):

கன்னி (Virgo) ராசிப் பெண்கள் இந்த ஆண்டு படிப்பில் சிறப்பான வெற்றியைப் பெறவார்கள். வேலைக்காக நேர்காணலுக்கு செல்லும் இந்த ராசிப் பெண்கள் அதில் வெற்றி பெற்று நல்ல வேலையைப் பெறுவது உறுதி. உங்களுக்கு ஏற்ற, உங்களுக்கு பிடித்தமான வாழ்க்கைத் துணையைப் பெறுவீர்கள். 

தனுசு (Sagittarius): 

தனுசு ராசி பெண்களுக்கு 2022-ம் ஆண்டு பல சாதனைகளையும் மகிழ்ச்சியையும் தரும். பணியில் இருக்கும் பெண்களும், வியாபாரம் செய்யும் பெண்களும் அதிகப்படியான பண வரவைக் காண்பார்கள். இந்த ராசிக்காரர்கள், சிக்கனம், திட்டமிடல் போன்றவற்றை கடைபிடித்து ஒழுக்கமான வாழ்க்கையை நடத்தினால், பல மடங்கு அதிக பலன்களைப் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | திருமணத் தடையை உண்டாக்கும் கால சர்ப்ப தோஷம்; பரிகாரம் என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News