Mars Transit 2022: செவ்வாயால் நல்ல காலம் பிறக்குது என்று ஆடிப்பாடலாம் கடக ராசிக்காரரே

 இன்னும் பத்து நாட்களுக்குப் பிறகு, இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் செவ்வாய் அருமையான மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பார்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 8, 2022, 09:37 PM IST
  • வருமானத்தைக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி
  • திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாக்கும் செவ்வாய்
  • சொத்துக் காரகர் செவ்வாய்
Mars Transit 2022: செவ்வாயால் நல்ல காலம் பிறக்குது என்று ஆடிப்பாடலாம் கடக ராசிக்காரரே title=

Mars Transit 2022: இன்னும் பத்து நாட்களுக்குப் பிறகு, இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் செவ்வாய் அருமையான மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பார்.

செவ்வாய்ப் பெயர்ச்சி வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இது ஒரு நபரின் தைரியம், வீரம், தொழில் முன்னேற்றம் மற்றும் உறவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மே 17ல் நடக்கும் செவ்வாய் ராசி மாற்றம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமானதாக இருக்கும்.

2022ஆம் ஆண்டு மே மாதம் 17ம் நாள் அன்று செவ்வாய், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்கிறார். பெயர்ச்சியாகும் செவ்வாய், தனது சொந்த ராசியான மீனத்தில் சஞ்சரிப்பார்.

இது அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தைரியம், வீரம், திருமண வாழ்க்கை, நிலம் ஆகியவற்றின் காரணியாக செவ்வாய் இருக்கிறார். செவ்வாய் கிரகத்தின் இந்த சஞ்சாரம், 3 ராசிக்காரர்களுக்கு  மிகவும் சுப பலன்களைத் தரும்.

மீன ராசியில் செவ்வாய் தங்கியிருந்து இந்த ராசிக்காரர்களுக்கு அருள் புரிவார். அந்தக் காலகட்டம் இவர்களுக்கு பல வழிகளில் அருமையான பலன்களைத் தரும்.

மேலும் படிக்க | Admirable Zodiac: கவர்ச்சியான ராசிகள்! எதிரில் இருப்பவர்களை வசீகரிக்கும் ராசி உங்களுடையதா?

இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும்
ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். தொழில் ரீதியாக அதிகபட்ச பலன்களைப் பெறுவார்கள்.நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும்.

பதவியில் உயர்வு கிடைக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். பணியிடத்தில் பாராட்டுகள் குவியும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். இது தவிர, கூட்டாக தொழில் செய்பவர்களுக்கும் நல்ல செய்தியே காத்திருக்கிறது. திருமணமானவர்களுக்கும் இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்: செவ்வாயின் இந்தப் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கும் சிறப்பான நேரத்தைக் கொண்டு வருகிறது. அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொழிலில் எளிதில் வெற்றி பெறலாம்.

புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். தொழில் செய்பவர்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த இந்த நேரம் நல்லது. ஆதாயம் கொடுக்கும் பெரிய ஒப்பந்தங்கள் செய்வதற்கு செவ்வாய் துணையிருப்பார்.

மேலும் படிக்க | புதன் வக்ர பெயர்ச்சி; 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட யோகம்

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரக மாற்றம் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். இதுவரை தடைபட்ட பணிகள் அனைத்தும் விரைவில் முடியும். எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். தொட்டக் காரியங்கள் துலங்கும்.

விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். விரும்ப்பிய பயணங்கள் கைகூடும். மாணவர்கள், தேர்வு மற்றும் நேர்காணலில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. அதோடு, பண வரத்தையும், சொத்து சேமிப்பையும் சாத்தியமாக்குவார் செவ்வாய் பகவான்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இனிமையாக பேசி மற்றவர்களை வசீகரிப்பதில் வல்ல ‘3’ ராசிக்காரர்கள்! 

மேலும் படிக்க | இனிமையாக பேசி மற்றவர்களை வசீகரிப்பதில் வல்ல ‘3’ ராசிக்காரர்கள்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News