இனிமையாக பேசி மற்றவர்களை வசீகரிப்பதில் வல்ல ‘3’ ராசிக்காரர்கள்!

ஜோதிட சாஸ்திரத்தில், 12 ராசிகளை சேர்ந்தவர்களுக்கும் உள்ள சில சிறப்பு குணங்கள்  குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 23, 2022, 08:41 PM IST
  • தனுசு ராசிக்காரர்கள் பார்ப்பதற்கு அப்பாவியாக இருப்பார்கள்.
  • துரோகம் செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து விலகி இருக்கிறார்கள்.
  • இந்த ராசிக்காரர்கள் பெரும் கூட்டத்திலும் கூட அனைவரையும் கவரும் வகையில் இருப்பார்கள்.
இனிமையாக பேசி மற்றவர்களை வசீகரிப்பதில் வல்ல ‘3’ ராசிக்காரர்கள்! title=

ஜோதிட சாஸ்திரத்தில், 12 ராசிகளையும் சேர்ந்தவர்களுக்கு உள்ள சில சிறப்பு குணங்கள்  குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. கிரகங்களின் தாக்கத்தால் ஒவ்வொரு ராசிக்காரர்களின் இயல்புகளும் வேறுபடும். சில ராசிக்காரர்களுக்கு மக்களுடன் இணக்கமாக வாழும் குணம் இருக்கும். சில ராசிக்காரர்கள் தங்கள் கவர்ச்சித் திறன்களால் எதிரில் இருப்பவர்களைக் கவர்ந்து விடுகிறார்கள். 

தனுசு 

தனுசு ராசிக்காரர்கள் பார்ப்பதற்கு அப்பாவியாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் மிகவும் மூளை கூர்மையானவர்கள். இந்த ராசிக்காரர்கள் இனிமையான பேச்சால் மற்றவர்களை கவர்வார்கள். தனுசு ராசிக்காரர்கள் கவர்ச்சிகரமானவர்கள். இது தவிர இந்த ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

விருச்சிகம்

இந்த ராசிக்காரர்களின் ஆளுமை பண்பு மிகவும் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு புதிய வேலையையும் செய்ய எப்போதும் தயாராக இருப்பார்கள். வாழ்க்கை துணை, உறவினர்கள், நண்பர்கள் என அனைவரின் கருத்துக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதேசமயம் மற்றவர்களால் ஏமாற்றப்படும் போது மனம் உடைந்து போவார்கள். எனவே அவர்கள் துரோகம் செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து விலகி இருக்கிறார்கள். வசீகரிக்கும் திறன் காரணமாக, இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு பிடித்தமானவர்களாக இருக்கிறார்கள்.

மேலும் படிக்க |  பிறக்கும் போதே அதிர்ஷ்டத்துடன் பிறக்கும் ‘3’ ராசி பெண்கள்..!!

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் மிகவும் சிந்திக்கக் கூடிய ராசிகளாக இருக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் பெரும் கூட்டத்திலும் கூட அனைவரையும் கவரும் வகையில் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் புதிதாக ஏதாவது செய்ய விரும்புகிறார்கள். மற்றவர்களுடன் சிறந்த உறவு இருக்கும். இது தவிர,  இந்த ராசிக்காரர்கள் எப்போதும் தங்களைப் பற்றியே சிந்திக்கும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Personality by Zodiac Sign: ஆடம்பர வாழ்க்கை வாழும் ‘4’ அதிர்ஷ்ட ராசிகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News