தேனிலவுக்கு பின்னர் மாமியாருடன் தனிக்குடுத்தனம் சென்ற மருமகன்!

திருமணத்திற்க்கு பின்னர் மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் தேனிலவுக்கு பின்னர் மருமகனுடன் தனிக்குடுத்தனம்!!

Updated: Jan 23, 2020, 03:39 PM IST
தேனிலவுக்கு பின்னர் மாமியாருடன் தனிக்குடுத்தனம் சென்ற மருமகன்!

திருமணத்திற்க்கு பின்னர் மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் தேனிலவுக்கு பின்னர் மருமகனுடன் தனிக்குடுத்தனம்!!

லண்டனை சேர்ந்தவர் லாரன் வால் (Lauren Wall) என்பவர் சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்த இவர் தனது தாய் ஜூலியின் அரவணைப்பிலேயே வளர்ந்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு இவருக்கும் ஏர்போட் ஊழியராக பணியாற்றி வந்த பால் ஒயிட் (Paul Whit) என்ற இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக மலை வாசஸ்தலமான தேவோனுக்கு புறப்பட்டுள்ளனர். அப்போது, தனது தாய் ஜூலியை தனியாக விட்டுவிட்டு செல்ல மனமில்லாத லாரன் வால், அவரையும் தங்களுடன் வருமாறு வற்புறுத்தி இருக்கிறார். 

இளம் ஜோடிகள் தேனிலவுக்காக செல்லுமிடத்தில் தனக்கென்ன வேலையென முதலில் மறுத்த ஜூலி, பிறகு மகளின் அன்புக் கட்டளையை மீற முடியாமல் அவர்களுடன் செல்வதற்கு சம்மதம் தெரிவித்தார். தேனிலவுக்கு சென்ற இடத்தில் தன் தாயுடன் தன் கணவர் பால் ஒயிட் கலகலப்பாக பேசிப் பழகுவதைப் பார்த்த லாரன் வால் தாய் மகனைப் போல பழகுவதாக நினைத்துள்ளார். லாரனின் சகோதரி ஒருவர் தன் தாய் ஜூலியின் தொலைபேசியை எதர்ச்சியாக பார்த்தபோது, அதில் தன் தாய் ஜூலிக்கும் தன் சகோதரி லாரன் வாலின் கணவனான பால் ஒயிட்டுக்கும் நடந்த ஆபாச உரையாடல்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பெற்றத் தாயே தன் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டதை அறிந்த லாரன் அதிர்ச்சியில் உறைந்துப் போயுள்ளார். 

இதையெல்லாம் விட உச்சமாக திருமண மோதிரத்தை கழற்றிப் போட்டுவிட்டு தன் மாமியார் ஜூலியின் வீட்டுக்கே ஒரேயடியாக குடியேறியுள்ளார் பால் ஒயிட். 9-வது மாதத்தில்  ஜூலி குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, 2009 இல் தான் முறைப்படி பால் ஒயிட்டை திருமணம் செய்துகொண்டார். இதில் மிக முக்கியமான விவகாரம் என்னவெனில் தனது மகளுக்கே போன் செய்து உனது கணவருடன் எனக்கு திருமணம் நடக்கிறது நீ கலந்து கொள் என அழைப்பு விடுத்துள்ளார் ஜூலி. தன் கணவனுக்கும் தன் தாய்க்கும் நடந்த இந்த திருமணத்தில், தன் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு லாரன் வாலும் கலந்து கொண்டுள்ளார். 

நடந்து பத்தாண்டுகளான நிலையில் லாரன் வால் தற்போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தானும் தனது குழந்தையும் தனியாக தவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.