நாக பஞ்சமி நாக வழிபாட்டில் போற்றுதற்குரிய நாளாகும். இந்நாளில் நாக தோசம் நீங்கவும், தங்களின் சந்ததிகளுக்கு அந்த தோசம் பாதிக்காமல் இருக்கவும் நாக வழிபாடு செய்கின்றார்கள். ஆவணி மாதத்தில் வருகின்ற பஞ்சமி திதியை நாகப் பஞ்சமி என்று அழைக்கின்றனர்.
ஒரு பெண் பாம்பினால் இறந்த தன் அண்ணன்களை இறை அருளாலால் உயிர் பெற வைத்த நாள் என்பதால் இந்நாளில் பூசை செய்தால், கணவனுக்கும், சகோதரர்களுக்கும் ஆயுள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை. நாக பஞ்சமி (Naga Panchami) ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் சுக்லா பக்ஷத்தின் (வளர்பிறை) ஐந்தாவது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நாக தேவர்களுக்காக முற்றிலும் அர்ப்பணிக்கப்படும் நாளாகும்.
ALSO READ | நாக பஞ்சமி Special: பாம்புகள் வீட்டிற்குள் விளையாடும் ஒரு வினோத கிராமம்!!
பூஜைக்கான சரியான நேரம்
2021ல் நாக பஞ்சமி ஆகஸ்ட் 13 வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 13ம் தேதி நல்ல நேரம் காலை 9.30 மணி முதல் 10.30 வரையும் கெளரி நல்ல நேரமான 12.30 மணி முதல் 1.30 மணி வரை நாக பஞ்சமி பூஜை செய்ய மிகவும் உகந்த நேரம் ஆகும்.
நாக பஞ்சமி வழிபாடு முறை
விட்டை சுத்தம் செய்து, நாக பஞ்சமி அன்று அதிகாலையில் குளித்து நாக பஞ்சமி விரதம் தொடங்க வேண்டும்.
கோயிலில் உள்ள நாகர் சிலைக்கு மஞ்சள், பால் அபிஷேகம் செய்வதோடு, வீட்டிலேயே சிறிய வெள்ளியால் செய்யப்பட்ட அல்லது செம்பில் செய்த நாகருக்கு பூஜை செய்து வழிபடவும். இந்த பூஜை பெண்கள் செய்வதால் தன் கணவன், குழந்தைகளின் ஆரோக்கியம், ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். விரதம் கடைப்பிடிக்கும்போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்துள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.
பூஜை முடித்த பின்னர் கோயிலுகுக்கு சென்று வழிபட்டு, நாக தேவர்களை வணங்கி வீட்டில் பூஜித்து உங்கள் விரதத்தை முடிக்கலாம். இந்த பூஜை செய்ததால் செல்வத்தையும் செழிப்பையும் பெற முடியும், மேலும் கால சர்ப தோஷம் நீங்கும்.
நாக பஞ்சமி ஸ்லோகம்
ஸ்ரீ கௌரி காயத்ரி மந்திரம்
ஓம் மகாதேவ்யை ச வித்மஹே
ருத்ர பத்னியை ச தீமஹி
தந்நோ கௌரி ப்ரசோதயாத்.
.ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி
ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்.
ALSO READ | Panchangam: இன்றைய பஞ்சாங்கம் 13 ஆகஸ்ட் 2021
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR