நவராத்திரி என்றாலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும். பணப் பிரச்சனைகள்இருப்பவர்கள், நவராத்திரியில் இந்த செடிகளை வீட்டில் நட்டால் பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும் என்று நம்பப்படுகிறது. செடி நட்டால், பணமாக காய்க்காவிட்டாலும், பணப்பிரச்சனை தீர்ந்தால் போதும் என்று தோன்றுகிறதா?
நவராத்திரி காலம் நல்ல காரியங்களை தொடங்குவதற்கு உகந்தது. இந்த நவராத்திரியில் அனைவரும் அவர்கள் வீட்டில் சில செடிகளை நட்டு வைத்தால், அது பணப் பிரச்சனையை தீர்க்கும் என்பது ஒருபுறம் என்றாலும், மறுபுறம் சுற்றுச்சூழலுக்கும், நாம் சுவாசிக்கும் காற்றையும் சுத்தப்படுத்தும் அல்லவா?
நவராத்திரியின் போது வீட்டில் புதிதாக வைக்க உகந்ததாகக் கருதப்படும் சில தாவரங்கள் உள்ளன. இதில் மிகவும் சிறப்பானது துளசி செடி. நவராத்திரியின் போது
நீங்கள் வீட்டில் ஒரு துளசி செடியை நட்டால் அது செழிப்பைத் தரும் என்று நம்பப்படுகிறது. இதேபோல், வாழை, சங்கு புஷ்பம் போன்றவற்றை பயிரிடுவதும் நல்லது.
இந்த செடிகளை வீட்டில் வைப்பதால் லட்சுமி கடாட்சம் பெருகும். வீட்டில் பணப் பிரச்சனையும் இருக்காது.
ALSO READ | பண்டிகை காலம் இது! எச்சரிக்கை!
துளசி செடிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. நவராத்திரியின் போது வீட்டில் துளசி செடியை பதியம் போட்டால் அன்னை மகாலட்சுமி மகிழ்ச்சி அடைவார் என்று நம்பப்படுகிறது. இது உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும் பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். இந்த செடியை நட்ட பிறகு, ஞாயிறு மற்றும் ஏகாதசியைத் தவிர தினமும் தண்ணீர் ஊற்றவும். மேலும், மாலையில், துளசி செடிக்கு அருகில் கண்டிப்பாக விளக்கு ஏற்றவும்.
நவராத்திரியின் போது வாழைக் கன்றை நடவு செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது. தண்ணீரில், சில துளிகள் பாலைக் கலந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் வாழை மரத்துக்கு விட்டு வந்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
சங்குபுஷ்பம்
சங்குபுஷ்பம் மூலிகையாகும். அதன் வேர்கள் முதல் இலைகள் வரை, மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது. மூலிகையாய் உடல் ஆரோக்கியத்தை காக்கும் சங்குபுஷ்பம், வீட்டில் செழிப்பையும் தருகிறது. நவராத்திரியின் போது சங்குபுஷ்பத்தின் வேரை வீட்டிற்கு கொண்டு பூஜையறையில் வைக்கவும். பணம் தொடர்பான பிரச்சனைகளை நீக்கும் அற்புதமான வழி இது.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை.
ALSO READ | Vitamin B12 குறைபாட்டை சாதாரணமாக எண்ண வேண்டாம்; எச்சரிக்கை தேவை..
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR