New Wage Code India Updates: ஊழியர்களுக்கு விரைவில் ஒரு பெரிய செய்தி வரவுள்ளது. அக்டோபர் 1 முதல் புதிய ஊதியக் குறியீட்டை அரசு அமல்படுத்தக் கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக புதிய ஊதியக் குறியீடு (New Wage Code) ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படவிருந்தது. எனினும், மாநில அரசுகள் மற்றும் பல நிறுவனங்கள் இதற்கு தயாராக இன்னும் அதிக நேரத்தை கோரியதால், அப்போது இதை செயல்படுத்த முடியவில்லை.
ஜீ நியூஸுக்கு கிடைத்த தகவலின்படி, இப்போது இந்த விதி அக்டோபரில் செயல்படுத்தப் படக்கூடும். அனைத்து மாநிலங்களும் தங்கள் சொந்த வரைவு விதிகளை தயாரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இதன் கீழ், ஊழியர்களின் சம்பளம், விடுமுறை நாட்கள் மற்றும் வேலை நேரம் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
1. ஆண்டின் விடுமுறைகள் 300 ஆக அதிகரிக்கும்
ஊழியர்களின் விடுப்பு ஊதியம் (Earned Leave) அதாவது விடுமுறை 240 லிருந்து 300 ஆக அதிகரிக்கப்படலாம். தொழிலாளர் குறியீட்டு விதிகளில் மாற்றங்கள் குறித்து தொழிலாளர் அமைச்சகம், தொழிலாளர் சங்கம் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் இடையே பல விதிகள் விவாதிக்கப்பட்டன. இதில், ஊழியர்களின் Earned Leave-ஐ 240 லிருந்து 300 ஆக உயர்த்த கோரிக்கை எழுந்தது.
2. ஊதிய அமைப்பு மாறும்
புதிய ஊதியக் குறியீட்டின் கீழ், ஊழியர்களின் ஊதிய (Salary) கட்டமைப்பில் மாற்றம் ஏற்படும். ஊழியர்களின் டேக் ஹோம் சம்பளம் குறையலாம். ஊதிய குறியீடு சட்டம், 2019 ன் படி, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் நிறுவனத்தின் (CTC) செலவில் 50% க்கும் குறைவாக இருக்கக்கூடாது. தற்போது, பல நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை குறைத்து, அதிக கொடுப்பனவுகளை வழங்குவதால், நிறுவனத்தின் சுமை குறைகிறது.
ALSO READ: புதிய ஊதியக் குறியீடு: சம்பளம், ஓவர்டைம் விதிகளில் முக்கிய மாற்றம்..!!
3. கொடுப்பனவுகள் குறைக்கப்பட வேண்டும்
ஒரு ஊழியரின் காஸ்ட்-டு-கம்பெனி (CTC) யில் மூன்று முதல் நான்கு கூறுகள் உள்ளன. அடிப்படை சம்பளம், வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), PF போன்ற ஓய்வூதிய சலுகைகள், கிராஜுவிட்டி மற்றும் ஓய்வூதியம் மற்றும் LTA போன்ற வரி சேமிப்பு கொடுப்பனவுகள் மற்றும் பொழுதுபோக்கு கொடுப்பனவுகள் ஆகியவை இதில் அடங்கும். இப்போது புதிய ஊதியக் குறியீட்டில், எந்த நிலையிலும் கொடுப்பனவுகள் மொத்த சம்பளத்தில் 50% ஐ தாண்டக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு ஊழியரின் சம்பளம் மாதம் ரூ .50,000 என்றால், அவரது அடிப்படை சம்பளம் ரூ. 25,000 ஆக இருக்க வேண்டும் மற்றும் மீதமுள்ள ரூ. 25,000 இல் அவரது கொடுப்பனவுகள் வர வேண்டும். அதாவது, இது வரை அடிப்படை சம்பளத்தை 25-30 சதவிகிதமாக வைத்து, மீதமுள்ள தொகையை கொடுப்பனவுகளாக வைத்த நிறுவனங்கள், இனி அடிப்படை சம்பளத்தை 50 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில், புதிய ஊதியக் குறியீட்டின் விதிகளைச் செயல்படுத்த நிறுவனங்கள் பல கொடுப்பனவுகளையும் குறைக்க வேண்டியிருக்கும்.
4. புதிய ஊதியக் குறியீட்டின் சிறப்பம்சம் என்ன
புதிய ஊதியக் குறியீட்டில் இருக்கும் ஏற்பாடுகள், அலுவலகத்தில் பணிபுரியும் சம்பள வகுப்பு, மில் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என அனைவரையும் பாதிக்கும். ஊழியர்களின் சம்பளம், அவர்களது விடுமுறை நாட்கள் மற்றும் வேலை நேரங்களும் மாறும்.
5. வேலை நேரம் அதிகரிக்கும் மற்றும் வாராந்திர விடுமுறை அதிகரிக்கும்
புதிய ஊதியக் குறியீட்டின் கீழ், வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கக்கூடும். முன்மொழியப்பட்ட தொழிலாளர் குறியீட்டில், ஒரு வாரத்தில் 48 மணிநேர வேலை விதி பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கூறியுள்ளது. சில தொழிற்சங்கங்கள் 12 மணிநேர வேலை மற்றும் 3 நாட்கள் விடுப்பு விதியை கேள்விக்குள்ளாக்கியது.
ஒரு நிறுவனம் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை முறையை ஏற்றுக்கொண்டால், அது மீதமுள்ள 3 நாட்களுக்கு ஊழியருக்கு விடுப்பு கொடுக்க வேண்டும். வேலை நேரம் அதிகரித்தால், வேலை நாட்களும் 6 க்கு பதிலாக 5 அல்லது 4 ஆக இருக்கும். ஆனால் இதற்காக ஊழியர் மற்றும் நிறுவனம் இருவருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட வேண்டும்.
ALSO READ: New Wage Code: இனி வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR