விமான சேவை நிறுவனங்கள் புத்தாண்டு சலுகை அறிவிப்பு - விவரம் உள்ளே!!

புத்தாண்டு வருவதையொட்டி விமான சேவை நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ள. அந்த சலுகையில் மிகவும் குறைந்த விலையில் விமான டிக்கெட்களை விமான சேவை நிறுவனங்கள் அறிவித்துள்ளது. 

Last Updated : Dec 27, 2017, 04:51 PM IST
விமான சேவை நிறுவனங்கள் புத்தாண்டு சலுகை அறிவிப்பு - விவரம் உள்ளே!! title=

புத்தாண்டு வருவதையொட்டி விமான சேவை நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ள. அந்த சலுகையில் மிகவும் குறைந்த விலையில் விமான டிக்கெட்களை விமான சேவை நிறுவனங்கள் அறிவித்துள்ளது. 

கோ-ஏர்:

ரூ. 1,005 முதல் விமான டிக்கெட் கிடைக்கும். இந்த மாதத்தில் டிக்கெட்டை பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை. இந்த சலுகையில் டிக்கெட்டை பதிவு செய்பவர்கள் அடுத்த மாதம் ஜனவரி 10-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை பயணம் செய்ய முடியும். மேலும் 10% சலுகை வேண்டும் என்றால் கோஏர் மொபைல் செயலியில் 'GOAPP10' என்ற கோடு பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு கோஏர் இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

ஸ்பைஸ்ஜெட்: 

spiceJet.com இணையதளத்தில் விமான டிக்கெட் பதிவு செய்தால், அதே விலை உங்களுக்கு ஸ்பைஸ் ஸ்டைல் இ-காமர்ஸ் இணையதளத்தின் கூப்பன் ஒன்று கிடைக்கும். அந்தக் கூப்பனை பயன்படுத்திப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் இந்த ‘ப்ளை ஃபார் பிரீ' சலுகை மூலமாக 2017 டிசம்பர் 31 வரை 2018 மார்ச் 31 வரை பயணம் செய்ய முடியும்.

ஜெட் ஏர்வேஸ்:

ரூ. 1,001 முதல் விமான டிக்கெட் கிடைக்கும். இந்தச் சலுகை விலையில் டிசம்பர் 23-ம் தேதி முதல் அடுத்த மாதம் ஜனவரி 2-ம் தேதி வரை டிக்கெட் பதிவு செய்துக்கொள்ளலாம்.10% கட்டண சலுகை வேண்டும் என்றால் எக்கானமி வகுப்பிலும், 15% கட்டணம் சலுகை வேண்டும் ஏற்றால் பிரீமியர் வகுப்பிலும் தங்கள் டிக்கெட்டை பதிவு செய்துக்கொள்ளலாம். இந்த சலுகை 44 வழித்தடங்களில் மட்டுமே உண்டு. மேலும் விவரங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

Trending News