சிபிஎஸ்இ 10 & 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கை ஒத்தி வைத்த நீதிமன்றம்

12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் (CBSE Exam) ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய, இந்த வழக்கின் இறுதி முடிவு அறிந்துக்கொள்ள, வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 23, 2020, 10:08 PM IST
  • சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் கோரிக்கை அடங்கிய வழக்கு ஒத்தி வைப்பு.
  • உச்சநீதிமன்றம் ஜூன் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
  • CBSE தேர்வு குறித்த விவாதங்கள் இறுதி கட்டத்தில் உள்ளன. நாளை மாலைக்குள், முடிவு இறுதி செய்யப்படும்: மத்திய அரசு
சிபிஎஸ்இ 10 & 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கை ஒத்தி வைத்த நீதிமன்றம் title=

புது டெல்லி: 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ (Class 12 CBSE exams) தேர்வுகளின் முடிவு குறித்து காத்திருக்கும் மாணவர்கள் இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். ஏனெனில் உச்சநீதிமன்றம் (Supreme Court) ஜூன் 23 (செவ்வாய்க்கிழமை) அன்று மனுவை ஜூன் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது, மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஜெனரல் துஷார் (Tushar Mehta) மேத்தாவின் கோரிக்கையைத் தொடர்ந்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் (CBSE Exam) ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய, இந்த வழக்கின் இறுதி முடிவு அறிந்துக்கொள்ள, இப்போது வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

இதையும் படியுங்கள்: CBSE, JEE, NEET தேர்வுகள் ரத்தாக வாய்ப்பு!! மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முக்கிய ஆலோசனை

இந்த விவகாரம் தொடர்பான விவாதங்கள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், ஜூன் 24 புதன்கிழமைக்குள் முடிவு எடுக்கப்படும் என்றும் எஸ்.ஜி. துஷார் மேத்தா கூறியதையடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதாவது துஷார் மேத்தா தரப்பில், "CBSE தேர்வு குறித்த விவாதங்கள் இறுதி கட்டத்தில் உள்ளன. நாளை மாலைக்குள், முடிவு இறுதி செய்யப்படும்" எனக் கூறினார்.

முன்னதாக, நிலுவையில் உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் 2020 ஜூலை 1 முதல் 15 ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று CBSE வாரியம் கூறியதை அடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், சிபிஎஸ்இ தேர்வுகள் (CBSE Exams be cancelled) ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், இதற்கு முன்பு நடந்த தேர்வுகளின் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சியை மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் கூறி, உச்சநீதிமன்றத்தில் பெற்றோர்கள் மனு தாக்கல் செய்தனர்.

இதையும் படியுங்கள்: மீதமுள்ள 12-ம் வகுப்பு CBSE தேர்வுகள் ரத்தாகுமா? உச்சநீதிமன்றத்தை நாடிய பெற்றோர்கள்

இதனையடுத்து, இந்த வழக்கு சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் ஜூன் 17 ம் தேதி அன்று, நிலுவையில் உள்ள தேர்வுகள் குறித்து சிபிஎஸ்இ (CBSE) அமைப்பு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், ஜூன் 23-க்குள் நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் (Ministry of Human Resource Development) முக்கிய ஆலோசனை நேற்று நடத்தியது,. தேர்வு குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், மீண்டும் இரண்டு அவகாசம் மத்திய அரசு கேட்டுள்ளது. 

அதாவது கால அவகாசம் கோரி கோரியபோது, ​​CBSE தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுப்பது இறுதி கட்டத்தில் உள்ளன என்றும், இது குறித்து புதன்கிழமைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் மேத்தா கூறினார்.

இதையும் படியுங்கள்: NEET போட்டித் தேர்வுக்கான online பயிற்சி வகுப்பினை துவங்கிவைத்தார் முதல்வர்!

அதேபோல பெற்றோர்கள் தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா (Rishi Malhotra), நீதிமன்றம் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா இருவரும் இது ஒரு "அசாதாரண நிலைமை" என்று ஒப்புக் கொண்டதாகக் கூறினார்.

தேர்வு குறித்து இறுதி முடிவு வெளியாகும் வரை கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் மாணவர்களை மேலும் கவலையடையச் செய்யும் என்று நான் கேட்டுக்கொண்டேன். எனவே அவர்கள் இந்த விவகாரத்தில் ஜூன் 25 அன்று இறுதி முடிவை அறிவிப்பார்கள்" என்று அவர் கூறினார்.

Trending News