3 பேருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது :முழு விவரம்

அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 3, 2018, 04:25 PM IST
3 பேருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது :முழு விவரம் title=

ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்று, ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குகின்றனர்.

அந்த வகையில் ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகளை பெறுவோரின் பெயர் அறிவிப்பு நேற்று முதல் துவங்கியது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த ஆர்தர் அஷ்கின், பிரான்சை சேர்ந்த ஜெரார்டு மவுரு, கனடாவை சேர்ந்த டோனோ ஸ்டிரிக்லேண்ட் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று 2018 ஆம் ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித், மற்றும் அர்னால்டு, பிரிட்டனின் கிரிகோரி விண்ட்டர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேதியலுக்கான நோபல் பரிசு பெரும் மூன்று பேரில் ஒரு பெண்மணியும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News