கடந்த 10 நாட்களில் பெட்ரோல் ரூ. 2.50; டீசல் ரூ. 3 அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் கவலை

கடந்த 10 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் உயர்வு வேகமாக அதிகரித்துள்ளது. மீண்டும் வாகன ஓட்டிகள் தங்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். 

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jan 19, 2019, 12:26 PM IST
கடந்த 10 நாட்களில் பெட்ரோல் ரூ. 2.50; டீசல் ரூ. 3 அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் கவலை

கடந்த 10 நாட்களுடன் ஒப்பிடும்போது சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு இரண்டரை ரூபாய் அதிகரித்துள்ளது. அதேபோல டீசல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாயை அதிகரித்து உள்ளது.

கடந்த ஜனவரி 9 ஆம் தேதி சென்னையில் பெட்ரோல் விலை 71 ரூபாயாகவும், 07 பைசாவும் இருந்தது. டீசல் விலை 65 ரூபாய் 70 பைசாவாக இருந்தது. ஆனால் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 73 ரூபாயாகவும், 41 பைசாவாகவும், டீசல் விலை லிட்டருக்கு 68 ரூபாயாகவும், 62 பைசாவாகவும் உள்ளது.

அதேபோல டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது, இன்று பெட்ரோல் லிட்டருக்கு 18 பைசாவும், டீசல் லிட்டருக்கு 21 பைசாவும் அதிகரித்து உள்ளது. 

இதற்க்கு காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, கச்சா எண்ணெய் விலை பேரல் 62.70 டாலராக உள்ளது. எனவே வரும் நாட்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

சென்னை மற்றும் இந்திய மெட்ரோ நகரங்களில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை....

சென்னை _____ பெட்ரோல் - ₹ 73.41 _____ டீசல் - ₹ 68.62
டெல்லி ________ பெட்ரோல் - ₹ 70.72 _____ டீசல் - ₹ 65.16
மும்பை _______ பெட்ரோல் - ₹ 76.35 _____ டீசல் - ₹ 68.22
கொல்கத்தா __பெட்ரோல் - ₹ 72.82 _____ டீசல் - ₹ 66.93