ஆண்டுதோறும் காலிபோர்னியவில் நடைப்பெறும் அகோரமான நாய்களுக்கான போட்டி இந்தாண்டும் சிறப்பாக நடைப்பெற்று முடிந்துள்ளது!
அதென்ன அகோரமான நாய்களுக்கான போட்டி என யாரும் போராட்டத்தில் குதித்து விட வேண்டாம். ஏனெனில் இது பிரபல சோனாம் மரியன் நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஒருங்கினைக்கப் பட்டு வருகிறது.
சோனம் மரியம் என்பது காலிபோர்னியாவின் சான்டா ரோஸ் பகுதியில் இருக்கும் கேளிக்கை திடலான சோனம் கண்ட்ரி பேர்குரவுண்ட்ஸ் திடலிம் ஆண்டுதோமறும் நடத்தப்படும் கேளிக்கை கொண்டாட்டங்களில் ஒன்று. இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் மிகவும் பிரபலமாகும்.
இந்த நிகழ்ச்சிகின் ஒரு பகுதியாக இந்த அகோர நாய்களுக்கான போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் 4-வது வாரத்தில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டிற்கானப் போட்டிகள் சிறப்பாக நடைப்பெற்றது. இப்போட்டில் கிட்டத்தட்ட 3000 பேர் கலந்துக்கொண்டு மகிழ்ந்தனர். போட்டியில் வென்ற நாய்க்கு $1500 (இந்திய மதிப்பில் 103462 ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிகளானது 1970-ஆம் ஆண்டுமுதல் நடைமுறையில் இருப்பதாகவும், நாய்களின் உரிமையாளர்களுக்கு தங்கள் நாய்களின் மீது அக்கரை கொண்டுவர வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே இந்த போட்டிகள் நடத்தப்படுவதாகவும் போட்டி ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.