close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

நவநாகரீக பொருட்களை தயாரிக்கும் முயற்சியில் பிரபல பாப் பாடகி!

பிரபல பாப் பாடகி ரிஹானா Fenty என்னும் ஆடம்பர பேஷன் பிராண்ட் நிறுவனத்தை துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளார், துவக்கிற்கு முன்னதாகவே தற்போது Fenty பிரபலமாகி வருகிறது!

Updated: May 11, 2019, 06:18 PM IST
நவநாகரீக பொருட்களை தயாரிக்கும் முயற்சியில் பிரபல பாப் பாடகி!

பிரபல பாப் பாடகி ரிஹானா Fenty என்னும் ஆடம்பர பேஷன் பிராண்ட் நிறுவனத்தை துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளார், துவக்கிற்கு முன்னதாகவே தற்போது Fenty பிரபலமாகி வருகிறது!

பாப் இசை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை அமைத்து வைத்திருப்பவர் ரோபின் ரிஹானா பென்டி. பாப் உலகை தவிர்த்து தற்போது இவர் பேசன் உலகிலும் கால் பதிக்கவுள்ளார். Fenty என பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் ஆடம்பர நவநாகரிக பொருட்கள் தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

@fenty .

A post shared by badgalriri (@badgalriri) on

ரிஹானா வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Fenty நிறுவனமானது, பிரான்சை மையமாக கொண்டு இயங்கும் Louis Vuitton Moët Hennessy Group (LVMH) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக LVMH நிறுனத்தின் உரிமையாளர் Bernard Arnault ரிஹானாவின் நிறுவனத்திற்கு உதவும் வகையில் தங்கள் நிறுவனத்தில் தனி ஒரு குழுவையே உண்டாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி வெளியான நொடி முதல் ரிஹானாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்., விரைவில் ஆரம்பமாகவுள்ள இந்நிறுவனதிற்கு தற்போது விளம்பரம் கிடைத்துவிட்டது. பிரபலமும் ஆகிவிட்டது என சந்தை நிபுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது LVMH நிறுவனத்தின் கீழ் Dior, Fendi, Givenchy, Marc Jacobs, மற்றும் Céline ஆகிய பிராண்டுகள் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது ரிஹானாவின் Fenty நிறுவனமும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.