Post Office Scheme: பணத்தேவை என்பது எல்லா மக்களுக்கும் எல்லா சூழ்நிலையும் தேவைப்படக்கூடிய ஒன்று, அவசர செலவுகள் என்பதும் அனைவருக்கும் இருக்கக்கூடியது தான். பிள்ளைகளின் கல்விச்செலவு, திருமண செலவு போன்ற பல வித அவசரகால செலவுகள் இருக்கிறது, அப்போது ஒரே நேரத்தில் நம்மால் அவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்வது மிகவும் கடினமான பணியாக இருக்கும். அதுவே நாம் ஏதாவதொரு முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்து வைத்திருந்தோம் என்றால் நம்மால் எவ்வித சிரமுமின்றி செலவுகளை சமாளித்துக்கொள்ள முடியும். சிறுக சிறுக நாம் முதலீடு செய்யக்கூடிய பணம் பிற்காலத்தில் பெரிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள உதவுகிறது.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அசத்தல் செய்தி: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியத் திட்டம்?
சிறந்த முதலீட்டிற்கு நிலையான வைப்புத் திட்டங்கள் நம்பகமானதாகக் கருதப்படுகின்றன, இதில் வட்டி விகிதங்களை உயர்ந்து வருவதால் நம்மால் சிறந்த வருமானத்தை பெற முடிகிறது. வங்கியில் எஃப்டி எனப்படும் நிலையான வைப்புத்தொகைக் கணக்கைத் திறப்பது உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக தெரிந்தால் கவலைப்பட வேண்டாம், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அஞ்சல் அலுவலகத்தில் நீங்கள் இந்த கணக்கை திறந்துகொள்ளலாம். அஞ்சலகத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாகவும், நல்ல வருமானமும், ஆபத்து இல்லாமலும் இருக்கும் மற்றும் இதில் நீங்கள் குறைந்த தொகையையும் முதலீடு செய்யமுடியும். அஞ்சல் அலுவலகம் மூலம் வழங்கப்படும் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் 10 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்களில் மொத்தம் 123 மாதங்களில் உங்களுக்கு இரட்டிப்பு தொகை கிடைக்கப்பெறும்.
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1000 முதலீடு செய்து ஆண்டுதோறும் 7 சதவீதம் சம்பாதிக்கலாம், அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை மற்றும் வருடந்தோறும் தொகை அதிகரிக்கப்படுகிறது. அவசரத்தேவைகளுக்காக பணம் பெற நினைப்பவர்கள் இரண்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த திட்டத்தில் பங்களிக்கலாம், 18 வயதுக்கு குறைவானவர்கள் கூட்டு கணக்கை திறக்கலாம். இத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்களை ஆன்லைனில் பெறலாம் அல்லது உள்ளூர் தபால் நிலைய கிளைகளிலும் பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசு மூன்றாவது காலாண்டில் சிறுசேமிப்புத் திட்டத்தின் விகிதத்தை 0.30 சதவீதம் உயர்த்தியது மற்றும் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திற்கான வட்டி விகிதம் 0.10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ