யோகி பாபுவுக்கு போட்டியான பாலிவுட் நடிகை இவர் தான்: ஸ்ரீநிவாஸ்

யோகி பாபுவுக்கு போட்டியான பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தான் என பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்!!

Last Updated : May 7, 2019, 03:10 PM IST
யோகி பாபுவுக்கு போட்டியான பாலிவுட் நடிகை இவர் தான்: ஸ்ரீநிவாஸ் title=

யோகி பாபுவுக்கு போட்டியான பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தான் என பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்!!

ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில், முதல் திங்களன்று மெட் காலா என்றொரு ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெறும். நியூயார்க்கின் மெட்ரோபாலிடன் மியூஸியம் ஆஃப் ஆர்ட் அமைப்புக்கு நிதியுதவி கோருவதற்காக இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த விழாவில் பிரபல நடிகர்கள், இளம் கலைஞர்கள், ஃபேஷன் துறை நிபுணர்கள் எனப் பலத் தரப்பினரும் கலந்துகொள்வார்கள். 

இந்நிலையில், இந்த வருடம் இந்த வருட மெட் காலாவின் தீமாக அறிவிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு மெட் காலா நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸும் கலந்துகொண்டார்கள். இப்போது காதல் தம்பதியராக மீண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள். இதில் பிரியங்கா சோப்ராவின் உடையும் அவருடைய ஒப்பனையும் அவரை எளிதில் அடையாளம் காணமுடியாத அளவில் இருந்தது. 

மெட் கலா உடை கண்காட்சியில், ஹாலிவுட் பிரபலம் பிரியங்கா சோப்ரா  கலந்துகொண்டார்.  அவரின் சிகை அலங்காரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பிரியங்கா சோப்ரா குறித்து ட்விட் செய்துள்ள  பாடகர் ஸ்ரீநிவாஸ் 'யோகிபாபுவுக்கு போட்டி வந்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

 

Trending News