FD விதிகளை மாற்றியது RBI: தெரிந்துகொள்ளவில்லை என்றால் இழப்பை சந்திக்க நேரிடலாம்

FD Rules Changed:எஃப்டி போடுவதற்கு முன், யோசித்து புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். இந்த விதிகளை நீங்கள் அறியவில்லை என்றால், நீங்கள் இழப்பை சந்திக்க நேரிடும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 29, 2022, 05:32 PM IST
  • எஃப்டி விதிகளில் மாற்றம்.
  • ஆர்பிஐ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • இந்த மாற்றங்களை தெரிந்துகொள்வது அவசியமாகும்.
FD விதிகளை மாற்றியது RBI: தெரிந்துகொள்ளவில்லை என்றால் இழப்பை சந்திக்க நேரிடலாம் title=

எஃப்டி விதிகளில் மாற்றம்: நீங்கள் நிரந்தர வைப்புத்தொகையில், அதாவது எஃப்டி-யில் பணம் போட்டிருந்தால், இது உங்களுக்கான செய்தியாக இருக்கும். எஃப்டி தொடர்பான விதிகளை ஆர்பிஐ மாற்றியுள்ளது. புதிய விதிகள் அமலில் வந்துள்ளன. கடந்த சில நாட்களாக, பல அரசு மற்றும் அரசு சாரா வங்கிகள் எஃப்டி-களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன. 

ஆகையால், எஃப்டி போடுவதற்கு முன், யோசித்து புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். இந்த விதிகளை நீங்கள் அறியவில்லை என்றால், நீங்கள் இழப்பை சந்திக்க நேரிடும்.

எஃப்டி முதிர்வு குறித்த விதிகளில் மாற்றம்
ரிசர்வ் வங்கி நிலையான வைப்புத்தொகையின் (எஃப்டி) விதிகளில் ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இப்போது மெச்யூரிட்டி ஆனவுடன், தொகையை க்ளைம் செய்யவில்லை என்றால், அதற்கு குறைவான வட்டியைப் பெறுவீர்கள். இந்த வட்டி சேமிப்பு கணக்கில் பெறப்படும் வட்டிக்கு சமமாக இருக்கும். தற்போது, ​​வங்கிகள் வழக்கமாக 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான நீண்ட கால எஃப்டிகளுக்கு 5%க்கும் மேல் வட்டி அளிக்கின்றன. அதேசமயம் சேமிப்புக் கணக்கில் வட்டி விகிதம் 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை இருக்கும்.

ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

ரிசர்வ் வங்கி வழங்கிய தகவலின்படி, நிலையான வைப்பு முதிர்ச்சியடைந்து, தொகை செலுத்தப்படாமலோ அல்லது உரிமைகோரப்படாமலோ இருந்தால், அந்த தொகைக்கு, வட்டி விகிதம் சேமிப்புக் கணக்கின்படி அல்லது முதிர்ச்சியடைந்த எஃப்டி-க்கு நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தின் படி, எது குறைவாக இருக்கிறதோ அது வழங்கப்படும். இந்த புதிய விதிகள் அனைத்து வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், உள்ளூர் பிராந்திய வங்கிகளில் உள்ள டெபாசிட்களுக்கு பொருந்தும்.

மேலும் படிக்க | Masked Aadhaar: ஆதாரின் நகலை பகிரவேண்டாம்: ஆதார் எண்ணை பகிர டிப்ஸ் தரும் UIDAI 

விதிகள் என்ன சொல்கின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்

நீங்கள் 5 வருட முதிர்ச்சியுடன் கூடிய எஃப்டி போட்டுள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம். அது இன்று மெச்யூர் ஆகி, நீங்கள் அதை எடுக்கவில்லை என்றால், இதற்கு இரண்டு விளைவுகள் இருக்கும். 

அந்த வங்கியின் சேமிப்புக் கணக்கின் வட்டியை விட எஃப்டி-யில் பெறப்படும் வட்டி குறைவாக இருந்தால், எஃப்டி மீதான வட்டியை நீங்கள் தொடர்ந்து பெறுவீர்கள். சேமிப்புக் கணக்கின் வட்டியை விட எஃப்டி மீதான வட்டி அதிகமாக இருந்தால், முதிர்வுக்குப் பிறகு சேமிப்புக் கணக்கின் வட்டியைப் பெறுவீர்கள்.

பழைய முறை என்ன?
முன்னதாக, உங்கள் எஃப்டி முதிர்ச்சியடைந்து ​​நீங்கள் அதை எடுக்கவில்லை அல்லது கிளைம் செய்யவில்லை என்றால், நீங்கள் முன்பு எஃப்டி செய்த அதே காலத்திற்கு வங்கி உங்கள் எஃப்டி-ஐ நீட்டிக்கும். ஆனால் இப்போது அப்படி நடக்காது. ஆனால் இப்போது முதிர்வு காலத்தில் பணத்தை எடுக்கவில்லை என்றால், அதற்கு எஃப்டி-க்கான வட்டி கிடைக்காது. எனவே முதிர்வு முடிந்த உடனேயே பணத்தை எடுத்தால் அது சிறந்ததாக இருக்கும். 

மேலும் படிக்க | 7th Pay Commission:ஊழியர்களுக்கு டிஏ அரியர் தொகை கிடைக்குமா, கிடைக்காதா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News