புகைப்படங்களை திருடும் 29 ஆபத்தான செயலிகளை நீக்கிய கூகுள்!!

புகைப்படங்களை திருடும் ஆபத்தான 29 கேமரா பில்டர் செயலிகளை கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது!!

Last Updated : Jun 10, 2019, 12:08 PM IST
புகைப்படங்களை திருடும் 29 ஆபத்தான செயலிகளை நீக்கிய கூகுள்!!

புகைப்படங்களை திருடும் ஆபத்தான 29 கேமரா பில்டர் செயலிகளை கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது!!

நாம் அனைவரும் சுற்றுலா சென்ற அற்புதமான நாட்களை மனதில் நீக்காமல் வைப்பது சுற்றுலாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அதிலும், தற்போதைய இளைஞர்கள் தங்களின் புகைப்படங்களை சமூக வலைதலங்கலான, முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவதர்காகவே புகைப்படங்கள் எடுக்கின்றனர். 

புகைப்படத்தில் தான் அழகாக தெரிய வேண்டும் என்பதர்கவே இன்னும் பலர் பல புகைப்படம் எடுக்கும் செயலிகளை பதிவிறக்கம் செய்து புகைப்படம் எடுக்கின்றனர். இந்த இளைங்கர்களுக்கான ஒரு திடிக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. புகைப்படங்களை திருடும் ஆபத்தான 29 கேமரா பில்டர் செயலிகளை கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆபத்தான ஆட்வேரால் பாதிக்கப்பட்ட சுமார் 238 ஆண்டிராய்டு செயலிகளை அண்மையில் கண்டறியப்பட்டன. சுமார் 440 மில்லியன் பயனர்கள் இந்த செயலிகளை பதிவிறவிக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றன. மற்றொரு புறம், கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள போலி இன்ஸ்டாகிராம் அசிஸ்டென்ஸ் செயலிகள் பயனாளர்களின் பாஸ்வேர்டுகளை திருடுவதாகவும் தகவல் வெளியானது. இதுமட்டுமல்லாமல், சில செயலிகள் ஆண்டிராய்டு ஸ்மார்ட் போன் பயனர்களின் புகைப்படங்களை திருடுவதது இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிய வந்தது. 

இதனிடையே பாதுகாப்பு நிறுவனமான டிரெண்டிங் மைக்ரோ என்ற நிறுவனம், கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள 29 கேமரா பில்டர் செயலிகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மால்வேர் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த செயலிகள் அதிகளவில் ஆசியாவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுவதாக அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆபத்தான 29 செயலிகளை கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது. 

கூகுள் நீக்கிய 29 செயலிகளின் பட்டியல்: 

Fill Art Photo Editor
Prizma Photo
Cartoon Art Photo
Wallpapers HD
Super Camera
Photo Art Effect
Art Effect 
Selfie Camera Pro
Pro Camera Beauty,
Pixture
Photo Editor
Magic Art Filter
Photo Editor
Horizon Beauty Camera
 Art Filter
Emoji Camera
Art Filter Photo 
Cartoon Photo Filter 
Art Filter Photo Effects
Cartoon Effect
Cartoon Art Photo
Art Filter Photo Editor, 
Cartoon Art Photo Filter 
Beauty Camera
Awesome Cartoon Art 
Artistic Effect Filter
Art Filp Photo Editing
Art Effect
Art Effect For Photo

மேற்கூறிய இந்த ஆப்களில் ஏதேனும் உங்கள் மொபைலில் இருந்தால் அதனை உடனடியாக டெலிட் செய்து விடுங்கள்.

 

More Stories

Trending News