ருத்ராக்ஷம்: யார் எல்லாம் அணியக் கூடாது... சில முக்கிய தகவல்கள்

RUDRAKSHA Significance: ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் பலன்கள் ஆன்மீகம், ஜோதிடம், அறிவியல் போன்றவற்றிலும் கூறப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 11, 2022, 02:55 PM IST
ருத்ராக்ஷம்: யார் எல்லாம் அணியக் கூடாது... சில முக்கிய தகவல்கள் title=

இந்து மதத்தில் ருத்ராட்சத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சிவ பெருமானின் கண்ணீரில் இருந்து ருத்ராட்சம் உருவானது என்று நம்பப்படுகிறது. ருத்ராட்சம் அணிவதால் பல நன்மைகள் உள்ளன. 

ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் பலன்கள் ஆன்மீகம், ஜோதிடம், அறிவியல் போன்றவற்றிலும் கூறப்பட்டுள்ளது. இதை அணிவது பல பிரச்சனைகளில் இருந்து காத்து, சிந்தனையை நேர்மறையாக வைத்திருக்கும். 

ருத்ராட்சம் அணிவதால், மன அமைதி, முன்னேற்றம், செல்வம், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை  ஆகியவை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 

ஆனால் இதனை விதிப்படி அணியும்போது மட்டுமே அதன் நல்ல பலன்களைத் தருகிறது. மேலும்,  ருத்ராட்சத்தை அணிந்த பிறகு, நபர் தேவையான விதிகளைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில், ருத்ராக்ஷம் தூய்மையற்றதாகி, லாபத்திற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும்.

மேலும் படிக்க | பிரச்சனைகள் விடாமல் துரத்துகிறதா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்

 

யார் எல்லாம் ருத்ராட்சம் அணியக்கூடாது

குழந்தை பிறந்த பிறகு, தாயும் குழந்தையும் சில நாட்களுக்கு ருத்ராட்ஷன் அணியக் கூடாது.  தாய் தவறுதலாக கூட ருத்ராட்சம் அணியக்கூடாது. இது தவிர, ருத்ராட்சம் அணிபவர்களும் தாய் மற்றும் குழந்தை இருக்கும் அத்தகைய அறைக்கு செல்லக்கூடாது. ருத்ராட்சம் அணிந்திருந்தால், தாய் மற்றும் குழந்தையின் அறைக்குள் நுழைவதற்கு முன், ருத்ராட்சத்தை கழற்றிய பிறகே பிறந்த குழந்தை அல்லது அவரது தாயிடம் செல்லுங்கள்.

ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டால் செய்யக் கூடாதவை 

ருத்ராட்சம் அணியும் போது தவறுதலாக கூட புகைபிடிக்காதீர்கள் மற்றும் அசைவ உணவுகளை உண்ணாதீர்கள். இதன் காரணமாக, ருத்ராட்சமும் தூய்மையற்றதாகிவிடும், மேலும் அது உங்களுக்கு நன்மைக்கு பதிலாக பெரும் தீங்கு விளைவிக்கும்.

தூங்கும் போது கூட ருத்ராட்சம் அணியக்கூடாது. ஒவ்வொரு இரவும் தூங்கும் முன் ருத்ராட்சத்தைக் கழற்றி தலையணைக்கு அடியில் வைப்பது நல்லது. இதனால் மனம் அமைதியாக இருக்கும், கெட்ட கனவுகள் வராது, நல்ல தூக்கம் வரும்.

இறுதி ஊர்வலத்தில் கூட ருத்ராட்சம் அணியக்கூடாது. இதைச் செய்வதன் மூலம் ருத்ராட்சம் தூய்மையற்றதாகி, அது உங்கள் வாழ்க்கையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | அபூர்வ நிகழ்வு: 2022 ஏப்ரலில் 9 கிரகங்களும் ராசி மாறுவதால் ஏற்படும் பலன்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News