புதுவை JIPMER மருத்துவ கல்லூரியில் காலியாகவுள்ள பேராசிரியர், இணை பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக JIPMER தெரிவித்துள்ளது!
JIPMER (Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research) மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள பணிகளை நிறப்புவதற்கு JIPMER-ன் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் (jipmer.puducherry.gov.in) அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இந்த பணிநிறப்பு முகாமில் 53 பணியிடங்கள் பூர்த்தி செய்ய JIPMER திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பணியமர்த்தப்படும் மருத்துவர்களுக்கு ₹2 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் MD அல்லது இதற்கு இணையான படிப்பினை முடித்திருத்தல் வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகுதி உடையவர்கள் வரும் அக்டோபர் 26-ஆம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டுமாய் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்...
- JIPMER-ன் அதிகாரப்பூர்வ இணையப்பக்கம் jipmer.puducherry.gov.in-க்கு செல்லவும்.
- முகப்பு பக்கத்தில் உள்ள “Apply online for faculty posts of AIIMS Nagpur” என்ற இணைப்பை பின்தொடரவும்.
- செயல்பாட்டில் உள்ள eMail முகவரி கொண்டு புதிய கணக்கினை உறுவாக்க வேண்டும்.
- பின்னர் உறுவாக்கப்பட்ட கணக்கின் முகவரியினை கொண்டு jipmer.puducherry.gov.in பக்கத்தில் மீண்டும் உள்நுழையவும்.
- கோரப்படும் தகவல்களை உள்ளிடவும்.
- பின்னர் Submit பொத்தானை Click செய்யவும்.
மேலும் விவரங்களுக்கு http://jipmer.puducherry.gov.in/ என்ற இணையப்பக்கதினை பார்வையிடவும்.