என் மனைவியிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்; கதறும் கராத்தே மாஸ்டர்!

சோஷியல் மீடியாவில் காதல், பின்னர் அதே பெண்ணை திருமணம் செய்துகொள்வது, இந்த நாட்களில் பெரும்பான்மை இளைஞர்களில் வாழ்க்கை முடிவு.

Updated: Jan 27, 2020, 06:40 PM IST
என் மனைவியிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்; கதறும் கராத்தே மாஸ்டர்!

சோஷியல் மீடியாவில் காதல், பின்னர் அதே பெண்ணை திருமணம் செய்துகொள்வது, இந்த நாட்களில் பெரும்பான்மை இளைஞர்களில் வாழ்க்கை முடிவு.

அவ்வாறு ஒரு சோஷியல் மீடியா காதல் செய்த நபர் ஒருவின் நிலைமை தற்போது சக்கர நாற்காலியில் நடந்து வரும் அளவிற்கு மோசமாகியுள்ளது. காரணம், அவரது மனைவி கராத்தே சாம்பியன். டெல்லி-என்.சி.ஆரின் நொய்டாவில் வசித்து வரும் அவர் தற்போது தனது மனைவியிடம் இருந்து தன்னை காப்பாற்றுமாறு உதவி நாடியுள்ளார்.

எனினும்., வீட்டு வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க அரசாங்கம் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது, ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் பெண்களிடன் இருந்து ஆண்களை காப்பாற்றுவதற்கான சட்டம் இல்லை என அவர் ஒதுக்கப்பட்டுள்ளார். 

நொய்டாவின் செக்டார்-19 -ல் நிகழ்ந்துள்ள இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இளம்பெண் ஒரு கராத்தே சாம்பியன். அவரிடம் அடிவாங்கி கணவர் தனது ஒரு காலினை இழந்தபிறகு தற்போது காவல்துறை உதவியை நாடியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதனுடன், கணவன்-மனைவியின் குடும்பத்தினரையும் காவல்துறை விசாரித்து, இருவருக்கும் இடையிலான சண்டை என்ன, இதுபோன்ற தகராறுகள் நடக்குமா என்பதை அறிய முயற்சிக்கின்றனர். மேலும் இவர்கள் இருவர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி, விஷயத்தை தீர்க்க முயற்சிக்கிறோம் என்றும் காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.