கார்களுக்கு லோன் பெற சில எளிய டிப்ஸ்!

கிரெடிட் ஸ்கோர் 701க்கு மேல் இருந்தால், கார் வாங்க நீங்கள் எளிதாக கடனுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் குறைந்த வட்டி விகிதங்களும் கிடைக்கும்.    

Written by - RK Spark | Last Updated : Aug 17, 2022, 08:35 AM IST
  • கிரெடிட் ஸ்கோர் 701க்கு மேல் இருந்தால், நீங்கள் எளிதாக கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • ல கடன் வழங்குநர்கள் காரின் செலவுகளில் 100% வரை நிதியளிக்கின்றனர்.
  • பட்ஜெட்டை கணக்கிட்ட பிறகு இந்த பட்ஜெட்டில் பொருந்தக்கூடிய காரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
கார்களுக்கு லோன் பெற சில எளிய டிப்ஸ்! title=

பெரும்பாலான மக்கள் முன்னர் இருசக்கர வாகனத்தின் மீது மோகம் கொண்டு அதனை வாங்குவதிலேயே நாட்டம் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது பெரும்பாலானோர் கார் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர், ஏனெனில் காரில் பயணிப்பது சௌகரியமாகவும், பாதுகாப்பாகவும் தோன்றுகிறது.  மக்களின் தேவைகளை கருதி சந்தையில் பலவிதமான கார்கள் வந்துவிட்டன, அதற்கேற்ப அதன் விலையும் இருக்கிறது.  பெரும்பாலான மக்கள் இருசக்கர வாகனங்களை போல கார்களையும் லோன் மூலம் எடுக்கின்றனர், கார் லோன் வாங்கும்போது சில விஷயங்களை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.  உங்களிடம் கிரெடிட் ஸ்கோர் 701க்கு மேல் இருந்தால், நீங்கள் எளிதாக கடனுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் குறைந்த வட்டி விகிதங்களும் கிடைக்கும்.  

எந்தவொரு கடனுக்கும் நீங்கள் விண்ணப்பிக்கும் முன், உங்களுக்குத் தேவைப்படும் கடன் தொகையைக் கணக்கிடுவது முக்கியம்.  மாதந்தோறும் எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டும் என்பதையும் கணக்கிட்டு  பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு திருப்பிச் செலுத்தும் திட்டத்தை உருவாக்கவும்.  சிபில் ஸ்கோர், வயது மற்றும் சம்பளத்தைப் பொறுத்து உங்களுக்கான அதிகபட்ச கடன் தொகை வழங்கப்படும்.  நீங்கள் காரின் விலையில் அதிகபட்சமாக 90% வரை கடன் வடிவில் பெறலாம், மீதமுள்ள 10% நீங்கள் மார்ஜினாக செலுத்த வேண்டும். இருப்பினும், சில கடன் வழங்குநர்கள் காரின் செலவுகளில் 100% வரை நிதியளிக்கின்றனர்.

மேலும் படிக்க | Dearness allowance: ஊழியர்களின் சம்பளத்தில் இவ்வளவு மாற்றங்களா?

 

பட்ஜெட்டை கணக்கிட்ட பிறகு இந்த பட்ஜெட்டில் பொருந்தக்கூடிய காரை தேர்ந்தெடுக்க வேண்டும்.  எடுத்துக்காட்டாக, உங்கள் குடும்பத்துடன் செல்ல விரும்பினால் செடான் அல்லது எஸ்யூவி அல்லது எம்யூவி சிறந்த தேர்வாக இருக்கும். மறுபுறம், தனியாக சவாரி செய்ய விரும்பினால், ஹேட்ச்பேக் அல்லது சிறிய டூ-டோர் காரைத் தேர்வு செய்யலாம், அது சிக்கனமாக இருப்பதுடன் சிறந்த மைலேஜ் தருகிறது.  கார் வாங்குவதற்கு முன்னர், ​​ஆன்லைனில் சில மாடல்களை ஆராய்ந்து பார்த்து பிறகு ஷோரூம்களுக்கு சென்று நீங்கள் விரும்பும் மாடல்களை டெஸ்ட் டிரைவ் செய்யலாம். 

கார் கடன்கள் பொதுவாக அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை இருக்கும், கடனை முடிந்தவரை விரைவாக முடிக்க விரும்பினால், குறுகிய கால அவகாசத்தில் கார் கடனை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.  அதேசமயம் குறைந்த கால அவகாசத்தில் கடன் பெற்றால் இஎம்ஐ தொகை அதிகமாகும், நீண்ட கால அவகாசத்தில் கடன் பெற்றால் இஎம்ஐ தொகை கம்மியாக இருக்கும், ஆனால் இது கார் கடனைப் பெறுவதற்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகையை அதிகரிக்கிறது.  கார் கடனை 5 ஆண்டுகளில் செலுத்தி முடிக்க முடியுமானால், கடன் வழங்குபவர் உங்களை அனுமதித்தாலும் திருப்பி செலுத்தும் அவகாசத்தை 6 அல்லது 7 ஆண்டுகளாக நீட்டிக்காதீர்கள்.  கார் கடனை வாங்கும் போது, ​​வெவ்வேறு கடன் வழங்குபவர்களால் விதிக்கப்படும் பல்வேறு வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும்.   தாமதமாக பணம் செலுத்தினால் அல்லது பணம் செலுத்த தவறினால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பதை தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி, 18 மாத டிஏ! முழு விவரம்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News