இது பாயும் புலி அல்ல... பயந்தோடும் புலி... இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்திய வீடியோ...

பாயும் புலியைக் கண்டால் பயந்தோடும் விலங்குகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், இதனை பொய்யாக்கும் வகையில், புலி ஒன்று பயந்து நடுங்கும் வீடியோ உங்களை வியப்பில் ஆழ்த்தும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 29, 2024, 07:20 PM IST
  • புலி என்றாலே அது வீரத்தையும், கம்பீரத்தையும் நம் முன்னால் கொண்டு வருகிறது.
  • சமூக ஊடகத்தில் வைரலாகும் புலி வீடியோ.
  • புலி எழுப்பும் கர்ஜனையை கேட்டாலே நமக்கெல்லாம் திகில் ஏற்படும்.
இது பாயும் புலி அல்ல... பயந்தோடும் புலி... இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்திய வீடியோ... title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம். அந்த வகையில், வனப்பகுதியில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

புலி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, அதன் கம்பீரமான தோற்றமும், அதிர வைக்கும் கர்ஜனையும் தான். கம்பீரமான தோற்றம் கொண்ட புலி, வனத்தில் பிற விலங்குகளை வேட்டையாடி துவம்சம் செய்வதை பார்த்திருப்போம். எந்த விலங்குக்கும் புலியை எதிர் நிற்கும் தைரியம் இருக்காது. பாயும் புலியைக் கண்டால் பயந்தோடும் விலங்குகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், இதனை பொய்யாக்கும் வகையில், புலி ஒன்று பயந்து நடுங்கும் வீடியோ உங்களை வியப்பில் ஆழ்த்தும்.

சிங்கத்திற்கு இணையாண வலிமை கொண்ட புலி என்றாலே அது வீரத்தையும், கம்பீரத்தையும் நம் முன்னால் கொண்டு வருகிறது. அதன் கர்ஜனையை கேட்டாலே நமக்கெல்லாம் திகில் ஏற்படும். காட்டில் உள்ள மற்ற விலங்குகள் எல்லாம் அதன் சத்தம் கேட்டாலே  அடங்கிவிடுகின்றன. புலி தொடர்பான வேட்டை வீட்யோக்களை நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் இது வேடிக்கையான வீடியோ.  ஆம்... புலி ஒன்று ஜாலியாக சக புலி ஒன்றை சீண்டுகிறது,. வனத்தில் படுத்துக் கொண்டிருக்கும் புலி, அதனால், பயந்து நடுங்கி, அதனை சீண்டிய புலியையும் நடுங்க வைத்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. 

திறந்த வெளியில் வன பகுதியின் அமைதியில், தன்னை மறந்து, ஆழ்ந்த தூக்கத்தில் படுத்துக் கொண்டு நிம்மதியாக இருந்த புலியை, சக புலி ஒன்று பயமுறுத்திய வீடியோ இணைய வாசிகளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பாய்ந்து போன புலி, சீண்டிய புலியையும் திகிலடைய செய்கிறது. பார்க்க மிகவும் வேடிக்கையான இந்த வீடியோ, இணைய வாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலாகும் புலி வீடியோ

 

மேலும் படிக்க | நீர்நாயை பார்த்ததும் குஷியான வாகன ஓட்டிகள்! நீங்களும் சிரிப்பீங்க...வைரல் வீடியோ..!

சமூக வலைதளத்தில் Nature is Amazing என்ற ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்ட இந்த வீடியோவை ஏராளமானோர் கண்டு ரசிப்பதுடன், பல விதமான கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர். அதில் சில பூனை குடும்பத்தை சேர்ந்தவை புலி என்பதை நிரூபித்துவிட்டன எஅன் கருத்து தெரிவிக்கின்றனர்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ரயிலில் ரொம்ப கூட்டம் இருந்தால்... இனி இதை செய்யுங்க - நிம்மதியா தூங்கிட்டு போகலாம் - வைரல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News