10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்: LPG ஏஜன்சி துவக்கி அதிக வருமானம் ஈட்டலாம்

உரிமம் பெற்ற பிறகு, ஒரு எரிவாயு ஏஜன்சியை அமைக்க சுமார் 1 வருடம் ஆகும். ஏனெனில் இதற்கு பல இடங்களிலிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 17, 2020, 11:10 AM IST
  • இந்தேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் ஆகியவை நாட்டில் அரசு நடத்தும் மூன்று எரிவாயு நிறுவனங்களாகும்.
  • மூன்று நிறுவனங்களும் தங்களுக்கான டீலர்களை நாடுகிறார்கள்.
  • LPG ஏஜன்சியைத் துவக்க முதலில், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்.
10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்: LPG ஏஜன்சி துவக்கி அதிக வருமானம் ஈட்டலாம் title=

எல்பிஜி எரிவாயு ஏஜன்சியைத் திறக்க அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த இலாபகரமான வணிகத்தை எளிதில் தொடங்குவது மட்டுமல்லாமல், முதல் நாளிலிருந்தே பணம் ஈட்டுவதற்கான நல்ல வாய்ப்பும் இதில் கிடைக்கும். நீங்கள் ஒரு கேஸ் ஏஜன்சியைத் துவக்க விரும்பினால், அது குறித்த அனைத்து விதிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

எரிவாயு நிறுவனங்கள் அவ்வப்போது எல்பிஜி டீலர்ஷிப் (LPG Dealership) பணித்திட்டங்களை நடத்துகின்றன. விநியோக வலையமைப்பை அதிகரிக்க, அவர்களுக்கு நகரத்தில் விநியோகஸ்தர்கள் தேவைப்படுகிறார்கள். மார்ச் 2021 க்குள், எரிவாயு நிறுவனங்கள் புதிய விநியோகஸ்தர்களை நியமிக்க வேண்டும். இதற்கான விளம்பரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.

நிலையான வருமானம் அளிக்கும் வணிகத்தைத் துவக்க வாய்ப்பு.

உரிமம் பெற்ற பிறகு, ஒரு எரிவாயு ஏஜன்சியை (LPG Gas Agency) அமைக்க சுமார் 1 வருடம் ஆகும். ஏனெனில் இதற்கு பல இடங்களிலிருந்து ஒப்புதல் பெற வேண்டும். தமிழகம், உ.பி., பீகார், வங்காளம், ஒடிசா மற்றும் மகாராஷ்டிராவில் இந்த நேரத்தில் இதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. இந்த மாநிலங்களில் நிறுவனங்கள் தங்கள் சாத்தியங்களை ஆராய்ந்து வருகின்றன.

LPG எரிவாயு ஏஜன்சி உரிமத்தை எவ்வாறு பெறுவது?

இந்தேன் (Indane), பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் ஆகியவை நாட்டில் அரசு நடத்தும் மூன்று எரிவாயு நிறுவனங்களாகும். மூன்று நிறுவனங்களும் தங்களுக்கான டீலர்களை நாடுகிறார்கள். இதற்காக, விளம்பரங்களும் அறிவிப்புகளும் அவ்வப்போது வழங்கப்படுகின்றன. நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலம் விண்ணப்பங்களை பெறுகின்றன.

செய்தித்தாள்கள் மற்றும் நிறுவனங்களின் இணையதளத்தில் விளம்பரங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப செயல்முறைக்குப் பிறகு லாட்டரி முறையில் விநியோகஸ்தர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

லாட்டரியில் பட்டியலில் உள்ள நபர்கள் மேலதிக செயலாக்கத்திற்கு அழைக்கப்படுகிறார்கள்.

ALSO READ: Good news: மானியம் இல்லாத LPG சிலிண்டரிலும் இந்த வழியில் தள்ளுபடி பெறலாம்!!

யார் LPG ஏஜன்சியை தொடங்கலாம்?

LPG ஏஜன்சியைத் துவக்க முதலில், பட்டப்படிப்பு தேவையான கல்வித் தகுதியாக இருந்தது.  ஆனால், இப்போது இது 10 ஆம் வகுப்பாக குறைக்கப்பட்டுள்ளது. இப்போது குறைந்தது 10 வது தேர்ச்சி பெற்றவர்கள் LPG டீலர்ஷிப்பை ஜெனரல் அல்லது ரெகுலேட்டர் பிரிவில் எடுக்க முடியும். எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில், 60 வயது வரை உள்ள எவரும் எரிவாயு ஏஜன்சி நடத்த விண்ணப்பிக்கலாம். இருப்பினும், முன்னர் LPG விநியோகஸ்தர்களுக்கான வயது வரம்பு 21 முதல் 45 வரை இருந்தது.

‘Family Unit’-லும் மாற்றங்கள்

நிறுவனங்கள் 'குடும்ப அலகு' என்ற வரையறையையும் மாற்றிவிட்டன. விண்ணப்பதாரரைத் தவிர, மனைவி, பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனர்கள், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், மருமகள் மற்றும் மைத்துனர்கள், மருமகன் மற்றும் தாத்தா பாட்டி ஆகியோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும், முன்னதாக குடும்ப பிரிவில், விண்ணப்பதாரர்கள், வாழ்க்கைத் துணை மற்றும் திருமணமாகாத குழந்தைகள் மட்டுமே இருந்தார்கள். திருமணமாகாத விண்ணப்பதாரருக்கு, பெற்றோர், திருமணமாகாத உடன்பிறப்புகள் ஆகியோர் பட்டியலில் இருப்பார்கள். விவாகரத்து செய்யப்பட்ட நபர்கள் / விதவை ஆகியோர் விஷயத்தில், தனிப்பட்ட மற்றும் திருமணமாகாத குழந்தைகள் மட்டுமே பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். 

ALSO READ: BSNL-ன் இந்த பம்பர் பிளானில் எக்கச்சக்க offers: Miss பண்ணிடாதீங்க

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News