பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் புகைப்படம் பதித்த புடவை அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!
ஜவுளிக்கு பெயர் போன சூரத் நகரில் அறிமுகமாகியுள்ள இந்த சேலைகள் மற்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் பதித்த டீ-சர்ட்டுகளை பாஜக இளைஞர்கள் அணிந்து வரும் நிலையில் தற்போது, மகளிர் அணிக்கு வசதியாக தற்போது மோடி புடவையினை சூரத் ஜவுளி கடை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பல வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சேலைகள், சில மோடியின் புகைப்படத்துடன் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளையும் கொண்டுள்ளது. சில சேலைகள் தாமரை மலர்கள் முன் மோடி ஒய்யாரமாக நின்றிருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோத்ரா பகுதியில் இருக்கும் ஜவுளிக் கடையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சேலைகளை அப்பகுதி பெண்கள் பலரும் ஆர்வமாக வந்து பெற்று செல்கின்றனர். இதுகுறித்து இக்கடைக்கு வழக்கமாக வந்து செல்லும் வாடிக்கையாளர் ஒருவர் தெரவிக்கையில்., "நான் இந்த கடைக்கு முதன்முறையாக சென்ற போது, மோடியின் புகைப்படம் பதித்த சேலையினை பார்த்தேன், பார்த்தவுடன் உடத்த வேண்டும் என என்னினேன்,. இந்த புடவையை அணிவதை நான் பெருமையாக நினைக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.