Auction Action: ஸ்டீவ் ஜாப்ஸின் முதல் வேலை விண்ணப்ப படிவத்தின் ஏல மதிப்பு இவ்வளவா?

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் ஒரே வேலை விண்ணப்பம் மிகப் பெரிய தொலைக்கு ஏலம் போனது. வீடியோ கேம் வடிவமைப்பாளராக இந்த வேலையில் சேர்ந்த ஜாப், இந்த விண்ணப்பத்தை அனுப்பியபோது அவருக்கு 18 வயதுதான்.   

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 1, 2021, 05:14 PM IST
  • ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் வேலை விண்ணப்பம்
  • மிகப் பெரிய தொலைக்கு ஏலம் போனது
  • வீடியோ கேம் வடிவமைப்பாளராக இந்த வேலையில் சேர்ந்தார் ஜாப்
Auction Action: ஸ்டீவ் ஜாப்ஸின் முதல் வேலை விண்ணப்ப படிவத்தின் ஏல மதிப்பு இவ்வளவா?

ஆப்பிளின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரேயொரு வேலைக்குக் மட்டும் தான் தனது கைப்பட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்திருக்கிறார். அது ஏலம் விடப்பட்டது, அது எவ்வளவு தொகைக்கு ஏலம் போனது தெரியுமா?

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவகர் ஸ்டீவ் ஜாப்ஸ். லட்சக்கணக்கானவர்களுக்கு அவர் வேலை கொடுத்திருந்தாலும், அவரும் ஒரு காலத்தில் வேலைக்காக விண்ணப்பித்திருக்கிறார். அவரது திறமையின் காரணமாக அனைவருக்கும் முன்னோடியாக திகழ்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ். 2011ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பினால் காலமானார் ஸ்டீவ் ஜாப்ஸ். 

தொழில்நுட்ப அறிவாளி எனப் புகழப்படும் ஸ்டீவ் ஜாப்ஸால் நிரப்பப்பட்ட கையால் எழுதப்பட்ட வேலை விண்ணப்பப் படிவம் 3,43,000 அமெரிக்க டாலருக்கு (ஏறத்தாழ ரூ. 2.5 கோடி) ஏலம் விடப்பட்டது. அவர் இந்த விண்ணப்ப படிவத்தை 1973 ல் பூர்த்தி செய்தார். இது அவரால் வழங்கப்பட்ட ஒரே வேலை விண்ணப்பம் என்று நம்பப்படுகிறது.

Also Read | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம், அதிரடி முடிவெடுத்த அரசாங்கம்

அதற்கு பிறகு 1976ம் ஆண்டில் அவர் தனது நண்பர் ஸ்டீவ் வோஸ்னியாக் உடன் இணைந்து ஆப்பிள் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அவர் இட்ட வித்து இன்று ஆலமரமாய் பலருக்கு வேலை வாய்ப்புகளை அள்ளி வழங்குகிறது.

வீடியோ கேம் வடிவமைப்பாளராக இந்த வேலையில் சேர்ந்த ஜாப், இந்த விண்ணப்பத்தை அனுப்பியபோது அவருக்கு 18 வயதுதான்.  

இது ஸ்டீவ் ஜாப்ஸின் ஒரே வேலை விண்ணப்பமாக கருதப்படுகிறது, ஏனெனில் 1976 இல் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸை நிறுவி, 1977 ல் ஆப்பிள் II என்ற பெயரில் நிறுவனத்தின் முதல் வெற்றிகரமான தனிப்பட்ட கணினியை அறிமுகப்படுத்தினர்.

Read Also | குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 30000 ஆண்டு சிறைதண்டனை!

இந்த விண்ணப்பப் படிவத்தில், 'பெயர்: ஸ்டீவன் ஜாப்ஸ், முகவரி: ரீட் கல்லூரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொலைபேசி: எண் குறிப்பிடப்படவில்லை. விண்ணப்பத்தில் மேஜர் படிப்பாக ஆங்கில இலக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்கில்ஸ் பகுதியில் கம்யூட்டர், கால்குலேட்டர் என்றும், தொழில்நுட்பம், டிசைன் பொறியியலில் சிறப்புத் தகுதி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்டீவ் ஜாப்ஸ் போர்ட்லேண்டின் ரீட் கல்லூரியில் படித்தார். படிப்பை பாதியில் விட்டுவிட்டு இந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். 

ஸ்டீவ் ஜாப்ஸின் இந்த விண்ணப்ப படிவம் ஏலம் விடப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பே, இது 2017 இல் $ 18,750 க்கும், 2018 இல் $ 1,74,757 க்கும், மார்ச் 2021 இல் $ 2,22,400 க்கும் என ஏலம் விடப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஏலத்தில், இந்த விண்ணப்பம் அதிகபட்ச விலை $ 3,43,000 (சுமார் ரூ. 2.5 கோடி) வாங்கப்பட்டது.

சமீபத்திய ஏலத்தின் ஒரு சிறப்பு அம்சம், இந்த முறை அதன் NFT ஏலமும் செய்யப்பட்டது. அதாவது, படிவத்தின் அசல் பிரதியுடன், அதன் டிஜிட்டல் நகலும் டிஜிட்டல் சொத்தாக விற்கப்பட்டது. இருப்பினும், அதன் டிஜிட்டல் பதிப்பின் விலை $ 23,076 (சுமார் ரூ. 17 லட்சம்) மட்டுமே.

Also Read | இன்று முதல் பெரிய மாற்றங்கள்: ATM, டெபிட், கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகளில் மாற்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News