தனக்கு தானே பேசிக்கொள்பவர்களை பல நேரங்களில் நாம் பார்திதருப்போம். நாமும்கூட சில சமயங்களில் இதனை செய்திருக்க வாய்ப்புகள் உண்டு. பொதுவாக இப்படி செய்வது மனநோய் என அடையாளப்படுத்தப்படுவதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். ஆனால், அண்மையில் வெளியாகியிருக்கும் ஆய்வு ஒன்றில், தனக்கு தானே பேசிக்கொள்வது மனநோய் அல்ல, உளவியல் ரீதியாக நல்லது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ALSO READ | சைவ உணவு பிரியரா! கவலை வேண்டாம்; புரோட்டீன் நிறைந்த உணவுகள் இதோ..!!
தனக்கு தானே பேசிக்கொள்ளும்போது கேள்விகள், யோசனைகள் ஒருவருக்கு வெளிப்படும் என தெரிவிக்கும் ஆய்வாளர்கள், எண்ணங்களும், நம்பிக்கைகளும் வலுப்பெறும் எனத் தெரிவித்துள்ளனர். நேர்மறை மற்றும் எதிர்மறை என இதில் இரண்டு வகைகளும் இருப்பதாக சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், அவநம்பிக்கை உடையவர்களுக்கு இந்த போக்கு எதிர்மறையாக அமைய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.
உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகம் இருப்பதை நீங்கள் உணர்ந்தால், தனக்கு தானே பேசிக் கொள்வதன் மூலம் அந்த எண்ண ஓட்டத்தை மாற்றி நேர்மறையானவர்களாக மாறிவிடலாம். தவறுகளை திருத்திக் கொள்ள திட்டிக் கொள்வது, தோல்வியின்போது நம்பிக்கை கொள்ள முயற்சி செய்வது உங்களை நேர்மறையானவர்களாக மாற்றும்.
ALSO READ | கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவரா நீங்கள்? இவற்றில் அதிக கவனம் தேவை
லட்சியத்தையும், யோசனைகளும் திரும்ப திரும்ப எண்ணும்போது சரியான வழியில் பயணிக்க தனக்கு தானே பேசிக்கொள்ளும் முறை உதவும். இதன்மூலம் உங்களின் மன அழுத்தம் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இதய ஆரோக்கிம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவையும் கூடும் என கூறும் ஆய்வாளர்கள், செய்யும் வேலையை சிறப்பாக செய்வீர்கள் என தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR