சென்னையில் வேலை வாய்ப்பு; கை நிறைய சம்பளம் கொடுக்கும் டிசிஎஸ்!

சென்னையில் பிரபல தனியார் நிறுவனமான டிசிஎஸ்ஸில் எக்ஸிகியூடிவ் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 3, 2022, 10:39 PM IST
சென்னையில் வேலை வாய்ப்பு; கை நிறைய சம்பளம் கொடுக்கும் டிசிஎஸ்! title=

டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (Tata Consultancy Services or TCS) நிறுவனம் சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படுள்ளது. எக்ஸிகியூடிவ் பணிக்கு ஆட்சேர்ப்பு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எத்தனை காலிப் பணியிடங்கள் என்று குறிப்பிடப்படவில்லை என்றாலும், பல்வேறு இடங்களுக்கு ஆட்கள் சேர்க்கப்படுகின்றனர். 

கல்வி தகுதி

டிசிஎஸ் நிறுவனத்தில் இருக்கும் காலிப் பணியிடங்களுக்கு விண்ணபிக்க விரும்புவோர் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், கல்லூரிகளில் BBA,BBM,BBS,Bachelor of Commerce படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க | ரயில்வேயில் வேலை வாய்ப்பு! விண்ணப்ப கட்டணம் இல்லை

ஊதியம்

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 4 ஆண்டு முதல் 12 ஆண்டுகள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டும். திறமைக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும்.

கடைசி தேதி 

ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான நபர்கள் நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அவர்கள் திறனறி தேர்வு மூலம் செய்யப்படுவார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? 

டிசிஎஸ் நிறுவனத்தின் https://www.tcs.com/ அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று Careers என்பதை கிளிக் செய்யவும். அதில் Search Jobs என்பதில் பணி தொடர்பான அறிவிப்பில் கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு! 8 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News