வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பெண் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது! யார் அந்த பெண் விஞ்ஞானிகள்

2020ஆம் ஆண்டுக்கான வேதியியல்ல துறையில் நோபல் பரிசு இரண்டு பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 7, 2020, 04:03 PM IST
  • இமானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் டவுட்னா 2 பெண் விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு.
  • மரபணு ஆராய்ச்சிக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
  • ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல், மருத்துவம், அமைதி என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.
வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பெண் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது! யார் அந்த பெண் விஞ்ஞானிகள் title=

Nobel Prize in Chemistry: 2020ஆம் ஆண்டுக்கான வேதியியல்ல துறையில் நோபல் பரிசு (Nobel Chemistry Prize) இரண்டு பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இமானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் டவுட்னா அவர்கள் மேற்கொண்ட மரபணு (CRISPR-Cas9 DNA snipping) ஆராய்ச்சிக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

 

ALSO READ | 2021 நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார் அமெரிக்க அதிபர் Donald Trump!!

இமனுவேல் சார்பென்டியர் (Emmanuelle Charpentier) பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுட்னா (Jennifer Doudna) அமெரிக்காவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு (Nobel Prize) ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல், மருத்துவம், அமைதி என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ALSO READ | Nobel Prize 2020: ஹெபடைட்டிஸ் சி வைரஸை கண்டறிந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News